மிச்சாங் புயலால் "இந்த" நிகழ்ச்சியும் கேன்சலாம்.. இன்னொரு வாரமும் கேன்சலாச்சுன்னா நல்லாருக்குமே!

Dec 07, 2023,03:37 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலின் காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்வதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த வாரமும் கூட இன்னும் மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருப்பதால் இந்த வாரமும் எலிமினேஷன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மிகவும் பிரபலமானது. இதில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது பிக் பாஸ் சீசன் 7 சீரிஸானது, அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த பிக்பாஸ் சீசனில் இரண்டு வீடுகள் உருவாக்கப்பட்டது.


பிக்பாஸ் சீசன் 7 பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும், கொண்டு ஆரம்பமானது.  சீசன் தொடங்கியதிலிருந்து பல்வேறு சண்டைகளும், வாக்குவாதங்களும், குழப்பங்களும் தற்போது வரை நீடித்துக் கொண்டே வருகிறது . இதுவரை இல்லாத அளவுக்கு வாய்ச்சண்டை இதில் அதிகமாகவே இருக்கிறது.




ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறி வந்தனர். அதற்குப் பதிலாக இரண்டு கண்டஸ்டன்கள் புதிதாக உள்ளே நுழைந்தனர். இறுதியாக கடந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்பட்டார். இப்படி ஒவ்வொரு வாரமும் ஓட்டு  போடப்பட்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றார்கள்.


மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆன்லைன் வாக்கெடுப்பு மூலமாகவோ அல்லது அழைப்பு சேவை மூலமாகவோ அல்லது ஹாட்ஸ்டார் ஆப் மூலமாகவோ வாக்களித்து தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிக்க இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஒரு போட்டியாளர் குறைவாக எவ்வளவு வாக்குகளை பெற்றிருக்கிறார்களோ அவரே போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் ஒவ்வொரு வாரத்திற்கான எலிமினேஷன் இறுதி முடிவுகள் விஜய் டிவி நிர்வாகத்தின் கையிலேயே உள்ளது.


தற்போது சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக சென்னை மாநகரமே கடல் போல் காட்சியளித்தது. பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் வடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மெல்ல மெல்ல தண்ணீர் வடிய தொடங்கி நிலைமை சீராகி வருகிறது. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும். இதனால் தான் தமிழக அரசு பல்வேறு தேர்வுகளை  ரத்து செய்துள்ளது.


இப்படி மக்கள் இயல்பு நிலையில் இல்லாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் நிலைமை முழுமையாக சரியாகவில்லை. அது சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. எனவே இந்த சலுகையை மேலும் நீட்டிக்குமா விஜய் டிவி என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.. கூடவே பிக் பாஸ் போட்டியாளர்களும்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்