சென்னை: சென்னை மார்க்கெட்டில், நேற்று உயர்ந்திருந்த தங்கம், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைக் கடையில் என்னய்யா நடக்குது... ஒரு நாள் குறையுது, ஒரு நாள் ஏறுது. எது எப்ப நடக்கும்னு தெரியா மாட்டேங்குது அப்படின்னு புலம்புற அளவுக்கு ஆயிப் போச்சு தங்கம் விலை. என்னக்கி நம்ம கடைக்கு கிளம்புறோமோ அன்று தான் விலை உயரும். வீட்டுல இருக்கிறப்பதான் குறையுது என்று நகை பிரியர்கள் சமீபகாலமாகவே அதிகமாக புலம்பி வருகின்றனர்.
அதற்கேற்பதான் தங்கம் விலையும் சமீபகாலமாக இருந்து வருகிறது. நேற்று உயர்ந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தியுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்ற இறக்கம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,650 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 190 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.1520 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,200 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,255 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,040 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,656 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்றும் குறைந்துள்ளது. அதுவும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 768 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,500 இருந்த விலை இன்று ரூ.96,000க்கு விற்கப்படுகிறது. இன்று மட்டும் கிலோவிற்கு ரூ.4500 குறைந்துள்ளது.
Real life Story.. இரு மனம் கலந்தது... இருமுறை மணம் (திருமணம்).. கதையல்ல நிஜம்!
ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்?.. தொடரும் குழப்பம்.. போட்டியில் முந்தும் பட்னாவிஸ்!
ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை.. நாளை 8 மாவட்டங்களில் அதி கன மழை.. வானிலை மையம் தகவல்
தமிழ்நாடு சட்டசபை டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!
Perth Test: 295 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து.. இந்தியா அபார வெற்றி!
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகள்.. அசர வைத்த ஆசிரியர்!
{{comments.comment}}