சென்னை: பிக்பாஸ் சீசன் 7 வரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் 8வது சீசனில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த நிலையில் இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் நடத்தப் போவது என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது.
ரஜினிகாந்த் முதல் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் வெளியாகி பல தரப்பினரிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அதற்கு காரணம் நடிகர் கமலஹாசன் தொகுப்பாளராக வந்தது தான். இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை காணவே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நிலவி வந்தது. ஆனால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மக்களிடையே ஆதரவு பெற்று சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ஓவியாவால் இந்த ஷோ மிகப் பெரிய பிரபல்யத்தை அடைந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொன்று சீசன்களையும் வித்தியாச முறையில் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார் கமல். கமல்ஹாசனின் கம்பீரமான பேச்சு, நடை, உடை, தோற்றம், அவர் போட்டியாளர்களைக் கையாண்டது, குறும்படம் போட்டுக் காட்டுவது என அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தது.
சமீபத்தில் நடிகர் கமலஹாசன் கமிட்டான புது படங்களில் பிசியாக இருப்பதால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இனிமே நாங்க பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம் என்று பலரும் கூறும் அளவுக்கு நிலைமை போனது. மறுபக்கம், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சூர்யா, சிம்பு என பல நட்சித்திரங்களை பலரும் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு நிகர் கமல்ஹாசன் தான். இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், அவர் அளவுக்கு ஓரளவுக்கு செய்யக் கூடியவர் என்றால் அது நிச்சயம் விஜய் சேதுபதிதான். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் குட் சாய்ஸாக இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}