கமல்ஹாசன் விடை பெற்று விட்டார்.. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யாரு?

Aug 10, 2024,01:58 PM IST

சென்னை: விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவதாக கமல்ஹாசன் அறிவித்து விட்டார். 7 சீசன்களை அவர் தொகுத்து வந்த நிலையில், 8வது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


பிக் பாஸ் என்றாலே கமல்ஹாசன்தான் முதலில் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் ஒரு கெத்தைக் கொடுத்துள்ளார். கமல்ஹாசனுக்கும் இந்த நிகழ்ச்சி பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது. கமலுக்கு நிகராக இனி யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.




விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு வகையான ரியாலிட்டி ஷோக்கள் பலதரப்பு மக்களையும் கவர்ந்து சாதனை படைத்து வருகிறது. அதிலும் முக்கியமான ஒன்றாக பிக்பாஸ் ஷோ இருந்து இருகிறது. குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காரணத்தால்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். ஏழு சீசன் வரை தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன். 


கமலஹாசன் அரங்கில் நடந்து வரும்போது கரவொலியால் அரங்கமே சும்மா அதிரும். உலக நாயகனின் கம்பீரமான பேச்சு, கவர்ச்சிகரமான நடை, அழகாக தோற்றத்தை பிரதிபலிக்கும் உடை, அறிவார்ந்த பேச்சு, அவர் காட்டும் குறும்படம் என எல்லாமே அனைவரையும் ஈர்த்தது. இந்த ஷோவில் மிகப் பிரபலமானதே கமல்ஹாசன் போட்டுக் காட்டும் குறும்படம்தான்.. அதேபோல அவர் பேசும், உங்களில் நான், அகம் டிவி வழியே அகத்திற்குள்ளே என கமல் பேசும் வசனங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வார்த்தைகள் இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.




ஏழு சீசன்களையும் தொகுத்து வந்த கமல்ஹாசன் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக  இருக்கிறார். இதனால் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க முடியாது என தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் ஷோவை அடுத்து தொகுத்து வழங்கப் போவது யார்.? யாருக்கெல்லாம் அந்த வாய்ப்பு உள்ளது.. யாருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கொடுக்கலாம்..என பலரும் விவாதித்து வருகின்றனர்.


சரத்குமார் பெயர் அடிபடுகிறது. அவர் ஏற்கனவே விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். அப்படி இல்லாட்டினா உங்களில் யார் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சூர்யாவாக இருக்குமோ என்ற பேச்சும் அடிபடுகிறது.. அதேசமயம் நடிகை ராதிகாவா.. அவர் மிகவும் அருமையாக பேசுவார்.  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கில்லாடி. இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தியுள்ளார். அது ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது. அதனால் ராதிகா வர வாய்ப்பு இருக்குமோ.. என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இவங்க யாருமே இல்லையெனில் கண்டிப்பா சிம்பு வருவார்.. ஏனெனில் பிக் பாஸ் சீசன் 6 நடந்து கொண்டிருந்த போது, கமல்ஹாசன் சில நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்டார். அப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். இதனால் சிம்புவுக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிட்டியது. எனவே அவரது பெயரும் அடிபடுகிறது.




அட இவங்கெல்லாம் கிடையாதுங்க.. கமலுக்கு நிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அவர் வந்தால்தான் இந்த நிகழ்ச்சி களை கட்டும்.. அவர் சும்மா வந்து நின்றாலே போதுமே.. எனவே கமல் இடத்தை ரஜினியால்தான் நிரப்ப முடியும். ஒருவேளை ரஜினிகாந்த் வந்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் களைகட்ட தொடங்கும். அதனால் ரசிகர்களிடையே ஆதரவு அதிகரித்து பிக் பாஸ் நிகழ்ச்சி சும்மா வேற லெவல் பட்டைய கிளப்பும். இதன் பார்வையாளர்களும் அதிகரிக்கும் என்று ரஜினி ரசிகர்கள் கூறுகிறார்கள்.


இப்படி பிக் பாஸ் சீசன் 8 ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கப் போவது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த எதிர்பார்ப்போடு காத்திருங்கள் மக்களே.. அகம் டிவி வழியே அகத்திற்குள்ளே வருபவர் யார்...? வரும் போது தெரியப் போகுது.. அதுவரை வெயிட்டிங்கிலேயே இருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்