Junior clerk Recruitment 2025: அரசு கல்வி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?.. இந்த செய்தி உங்களுக்கு தான்!

Mar 20, 2025,12:47 PM IST

சென்னை:   அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலைக்கு 199 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.


இந்தியா முழுவதும் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 




அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க்  பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தகுதி உடையவர்கள் செயல்முறை தேர்வுகளில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகிய முறைகளின் படி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.


குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும்  மார்ச் 18ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதிக்குள்  https://bhu.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்