Bharathiyar Birth anniversary: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..!

Dec 11, 2023,12:37 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: மகாகவி பாரதியார்.. தீப்பொறி வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன்.. பெரும் கோபக்காரன்.. தரித்திரம் பிடித்த விதிகளைப் பிடித்துக் கொண்டு சமூகத்தை சீரழித்த சதிகாரர்களைப் பார்த்து அக்கனியைக் கக்கிய ஆத்திரக்காரன்.. இன்றும் கூட அவனது கனவுகள் பல கனவுகளாகவே இருப்பது சோகம்தான்.

எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, கட்டுரையாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞர் பாரதியார். இவருடைய பிறந்தநாள் இன்று.

சின்னசாமி சுப்பிரமணிய பாரதியார்.. டிசம்பர் 1882ல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். தலைப்பாகை.. முறுக்கு மீசை.. நெற்றியில் திலகம்.. என்று தமிழனுடைய வீர அடையாளமாக 
திகழ்பவர் மகாகவி பாரதியார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு என்று வகை தொகையில்லாமல் பாடியுள்ள இந்த முண்டாசுக் கவிஞன், தமிழ் மொழி மட்டுமல்லாமல் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம், போன்ற பிற மொழிகளிலும் சிறந்த கவிஞராக விளங்கினார். 



சாதி மறுப்பு, பெண் விடுதலை, தமிழர் நலன், பல்வேறு சமயங்கள் குறித்த கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ள பாரதியாரின் எழுத்துக்கள் மூலம் மக்களிடம் விடுதலை உணர்வு மட்டும் ஏற்படவில்லை. மாறாக சமூகத்தை மாற்றியமைக்கும் சிந்தனையும் கூட கிளர்ந்தெழுந்தது. 

பல மொழி அறிந்த காரணத்தால்தான் பாரதிக்கு தமிழ் மீது அதிக பற்று படர்ந்தது. தான் அறிந்த மொழிகளிலேயே சிறந்தது தமிழ் என்று அவர் பாடக் காரணமும் அதுவே. தமிழ் மொழி மீது உள்ள பற்றுதலால் அதைப் போற்றிப் புகழ்ந்தவர்.. பாடிக் குவித்தவர்.. எழுதித் தள்ளியவர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ் மொழி என்னும் தேனை மக்கள் மனதில் ஊட்டியவர். யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனி தாவதெங்கும் காணோம்.. என்று.. நான் அறிந்த தமிழ் மொழி சிறப்பான மொழி. தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியிலும் சிறப்பு கிடையாது  என தமிழ் மொழியின் மீதுள்ள அதீத பற்றை வெளிப்படுத்தியவர்.

ஆனால் இன்று எத்தனை பேரிடம் தமிழ் இருக்கிறது.. தமிழை மறந்தும், துறந்தும்தானே பலர் தமிழர்களாக உள்ளனர். நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசுவதும் உரையாடுவதும் மட்டுமே மரியாதையாக இருக்கும் என பலரும் எண்ணுகின்றனர். தாய் மொழியாகிய தமிழ் மொழியில் பேசுவதை கேவலமாகவும் நினைக்கின்றனர். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பல தமிழர்களைப் பார்க்கிறோம். இப்போது பாரதி மட்டும் இருந்தால் தமிழை துச்சமாக என்னுவோரைப் பார்த்து கவிதைகளால் தாக்கியிருப்பார். 

பாரதியாரின் தமிழ் சிந்தனைகளை மாணவ மாணவியர்களிடம் அதிக அளவில் பரப்ப வேண்டும். இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மொழியை போற்றும் பாரதியாரின் கொள்கைகளை கடைபிடிக்க வழி வகுக்க வேண்டும்.ஆங்கில மொழி பேசுவது மூலம் மட்டுமே மரியாதை என்பது கிடையாது. தமிழ் மொழியை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் பேசுவது தமிழ்நாட்டிற்கே மரியாதை . அதுவும் பாரதி வாழ்ந்த தமிழ் மண்ணில் தமிழ் பேசுவது என்பது தமிழனாகிய நமக்கு பெருமையும் கூட. தமிழ்நாட்டு மக்கள் தயக்கமில்லாமல் தமிழில் பேச வேண்டும். இதன் மூலமாக மட்டுமே தமிழ் மொழியின் வளர்ச்சி உயரும். மரியாதை நம்மிடம் தேடி வரும்.  அதற்குப் பாரதியை பயன்படுத்த வேண்டும்.

தமிழுக்காக மட்டுமல்ல, மகளிர் உரிமைக்காக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தியவர் பாரதி.  அந்த உயரிய குரல்களை, அவர் எழுதிய பாடல்களை பட்டி தொட்டியெங்கும் தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். 

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற கூற்றுக்கிணங்க .. பாரதியாரின் கொள்கைகளும், அவரது போர் முரசமும், பெருமையும் என்றும் அழியாது..  சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் முழுமையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை அதற்கு ஓய்வே கிடையாது. அழிவும் கிடையாது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்