மே 12ல் மாபெரும் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு.. நீங்களும் பங்கேற்க முன்பதிவு செய்யுங்க

Mar 22, 2025,03:26 PM IST
சென்னை : தமிழகத்தில் பிரம்மாண்ட பரத நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி மே 12 ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் உடனடியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

நடராஜர் ஆலயம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜர் கோவில் தான். ஆனால் நடராஜர் சுயம்புவாக, உயிரோட்டமுள்ள திருமேனியாக காட்சி தரும் தலம் ஒன்று உள்ளது. அது தான் கோனேரிராஜபுரம். பலரும் அறிந்திடாத இந்த கோவிலில் நடராஜரின் திருமேனி, உளி கொண்டு செதுக்கப்படாதது. இதில் நகரங்கள், ரோமங்கள், நரம்புகள் உள்ளிட்டவைகள் மனித உடலில் இருப்பது போலவே காட்சி தரும். அதே போல் மன்னர் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்பும் நடராஜரின் வலது காலில் இன்றும் இருக்கும்.

இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கோனேரிராஜபுரம் திருக்கோவில். இங்கு, தில்லை அம்பலம் என்ற பெயரில் மே 12ம் தேதி மாலை 4 மணிக்கு, மாபெரும் பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோனேரிராஜபுரம் என்பது ஆடல் அரசனான  நடராஜ பெருமான் சுயம்புவாக கோவில் கொண்டுள்ள தலமாகும். உலகத்திலேயே நடராஜர் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் ஒரே தலம் கோனேரிராஜபுரம் தான். இங்கு ஐந்து உயர ஐம்பொன்னாலான நடராஜர் அருள்பாலிக்கிறார். 



International pride World records என்ற பெயரில் கோனேரிராஜபுரத்தில் மாபெரும் உலக சாதனை சித்திரை பெளர்ணமி திருநாளில் பரதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய சுயம்பு நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணமாக இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் புகழ்பெற்ற நடன இயக்குனர் கலா மாஸ்டர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி அனைத்து தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்ச்ச்யில் பங்கேற்க விரும்புபவர்கள் 7539901066, 7539901066 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும், Virtual2Live Appல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சி மொரைஸ் நகரில் இதேபோன்ற பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
திருச்சி மொரைஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பரதகலைஞர்களின் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

கலா மாஸ்டர், கொற்றவை தமிழ்சபை நிறுவனர் மடாதிபதி குருஜி சுரேந்திர ஸ்ரீ மகாராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்வின் அழகை கூட்டினர். சிவன், பார்வதி மற்றும் கணேசன் யானை தெய்வீக தோற்றம் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. இந்த நிகழ்வு IPWR - இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் குழு உலகசாதனையை ஆராய்ந்து அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்