பாய் வீட்டுக் கல்யாண ஸ்டைல் சிக்கன் சுக்கா சாப்ட்ருக்கீங்களா.. வீட்லயே பண்ணலாம்.. எப்படி தெரியுமா?

Jul 09, 2024,09:20 PM IST

சென்னை:   ஹாய்.. என்னங்க இன்னிக்கு லன்ச்?.. மத்தியானமாய்ருச்சு.. காலைல பரபரப்பா வேலையை முடிச்சிட்டு இப்ப எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பீங்க. அப்படியே கொஞ்ச நேரம் எல்லாரும் ரீல்ஸ் பார்க்கலாம்ன்னு போனை எடுத்தா அங்க ஃபுட் ரிவ்யூ பண்றவங்க இந்த ஹோட்டல்ல சிக்கன் நல்லா இருக்கும், அந்த ஹோட்டலில் மட்டன்  நல்லா இருக்கும்ன்னு நம்மளுக்கு  நான் வெஜ் க்ரேவிங்ஸை உண்டாக்கிடுவாங்க.


அதைப் பார்த்துட்டு நம்ம எல்லோருக்கும் நான்வெஜ் சாப்பிடணும்னு ரொம்ப ஆசை வந்துரும். ஆனால் ஹோட்டல்ல போய் சாப்பிட்டால் செலவும் அதிகமாகும்,  உடம்புக்கும் ஒத்துக்காது. ஆனா அதுக்காக அப்டியே விட்ர முடியாதே.. வீட்லயே செஞ்சு சாப்பிடலாமே? அதுக்கு தான் இன்னைக்கு நான் ஒரு ஈஸியான கல்யாண ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று சொல்ல போறேன். பாய் வீட்டுக் கல்யாண ஸ்டைல்னு கூட சொல்லிக்கலாம்.. அவ்வளவு சூப்பரா இருக்கும்.. நோட் பண்ணி வச்சுக்கோங்க, இப்ப எப்படி பண்ணறதுன்னு பார்க்கலாம் வாங்க!




சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:


பெரிய வெங்காயம் -  2

தக்காளி -2

சிக்கன் -1  கிலோ

கருவேப்பிலை மல்லி - சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்


வறுத்து பொடி பண்ண:


மல்லி -2 டேபிள்ஸ்பூன்

கிராம்பு -4

மிளகு -1 ஸ்பூன்

சீரகம் -3/4 ஸ்பூன்

வரமிளகாய் - 6

ஏலக்காய் - 3 

சோம்பு 11/2 ஸ்பூன் 

பட்டை -3 துண்டுகள்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் -50 கிராம்

தண்ணீர் - ஒரு டம்ளர்


செய்முறை:   முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தனியா, வர மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிம்மில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (டிரை ரோஸ்ட்) பின்னர் வருத்த மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்து நன்றாக  கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்க வேண்டும்.


பின்னர் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதில் கலந்து நன்றாக வேக விடவும். பிறகு சுத்தம் செய்த கோழிக்கறியை அதில் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மீடியம் ஃப்ளேமில் வைத்து நன்றாக வேக வைக்க வேண்டும், சிக்கன் வெந்து தண்ணீர் நன்கு வற்றியதும், அரைத்து வைத்திருக்கம் பொடியை தூவி அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து நன்றாக கிளறி அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால், கம கமன்னு வாசத்தோட கல்யாண வீட்டு சிக்கன் சுக்கா ரெடி ஆகிடும். 


பேச்சுலர்ஸ், பிகினர்ஸ் கூட இந்த ரெசிபியை செய்யலாம். இந்த சுக்காவை அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அல்டிமேட்டா இருக்கும்! அப்புறம் என்னங்க! கடைக்கு போய் டக்குனு சிக்கனை வாங்கிட்டு வந்து செஞ்சு பாருங்க. உங்க புட் கிரேவிங்ஸ fullfill பண்ணுங்க. நான் அடுத்த ரெசிபியோட அப்பறமா வரேன்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்