சென்னை: நடிகர் கே பாக்யராஜ் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ஆண்டவன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் கே. பாக்யராஜ். இவர் மிகப் பிரபலமான பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
பின்னர் ஒரு சில படங்களில் சிறுசிறு ரோல்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா புதிய வார்ப்புகள் என்ற படத்தில் பாக்கியராஜயை வசனகர்த்தாவாக மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார். பின்னர் சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தில் அறிமுக இயக்குனராகவும் வலம் வந்தார்.
இதை தொடர்ந்து பாக்கியராஜ் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த திரைப்படங்களாக இருந்தன. அப்படிப்பட்ட திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடும் திரைப்படங்களாகவே அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இப்படத்தில் முருங்கைக்காய் பற்றிய வசனங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மிக பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவ்வப்போது ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் பாக்கியராஜ் தற்போது ஆண்டவன் என்ற படத்தில் கமிட்டாகி, அப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
வில்லியம் பிரதர்ஸ் ப்ரடக்சன் தயாரிப்பில் ஆண்டவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார் வி.வில்லி திருக்கண்ணன். நாட்டில் ஒரு புறம் நகரங்கள் வாழ்கிறது.மறுபுறம் கிராமங்கள் அழிகிறது. கிராமங்கள்தான் நமது நாட்டின் முதுகெலும்பு போன்றவை என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழ வைக்க வேண்டும் என்ற கதையை அழுத்தம் திருத்தமாக இப்படத்தில் கூறியுள்ளாராம்.மேலும் ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு சரியான நேரத்தில் யார் உதவுகிறாரோ அவரை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே இப்படத்தின் மைய கதையாம்.
இதில் நடிகர் பாக்கியராஜ் கலெக்டராக நடித்துள்ளார். டிஜிட்டல் விஷன் யூடியூபர் மகேஷ் கதை நாயகனாகவும் ,வைஷ்ணவி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்களை, ஆதிரை ,ஹலோ கந்தசாமி, எம் கே ஆர் முத்து செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}