வெட்டி வேரு வாசம்.. வீடெங்கும் வீசும்.. இயற்கையே கொடுத்த சூப்பர் டானிக் பாஸ் இது!

Apr 17, 2024,06:44 PM IST

- பொன் லட்சுமி


"வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்"


திண்ணையில் கையைக் காலை நீட்டி பாதி படுத்தவாக்குல உட்கார்ந்து, மலேசியா வாசுதேவன் உருகி உருகி பாடிய இந்தப் பாட்டை மெல்ல மெல்ல மனசுக்குள் அசை போட்டு ரசிக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கே.. ஆஹா.. என்னா பாட்டு என்னா வாய்ஸு.. என்னா மாஸு.. பாரதிராசா பாரதிராசாதாய்யா!


ஆனா அதை விட சூப்பரானது ஒரிஜினல் வெட்டி வேர்தான். வெட்டி வேர்னாலே முதல்ல நம்மளைத் தாக்குவது .. அதோட அட்டகாசமான வாசம்தான், நறுமணத்திற்குப் பெயர் போனது வெட்டி வேர். ஆனால் வெறும் வாசத்துக்காக மட்டும் பயன்படுத்துவது இல்லைங்க இதுல எண்ணற்ற மருத்துவ குணங்களும் அடங்கி இருக்கு.


இது வறட்சியை தாங்கக்கூடிய  பயிர் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரிட்டாலே நன்கு செழித்து வளரும் தாவரம், மூலிகைகளிலேயே ஒரு தனித்துவமான வாசனை  இதற்கு உண்டுங்க  மனசையும்  சரி உடம்பையும் சரி புத்துணர்ச்சியா வைக்கிறதுக்கு இயற்கை கொடுத்த டானிக் தான் இந்த வெட்டிவேர்.. வாங்க இதுல என்னென்ன  மருத்துவ குணங்கள் அடங்கி இருக்குன்னு பாக்கலாம்...


மருத்துவத்தில்:-




வெயில் காலம் ஆரம்பிச்சாலே  பல பேரும் அனுபவிக்கிற பிரச்சனை  தான் உடல் உஷ்ணம். இதற்கு சரியான மருந்து இந்த வெட்டிவேர் தான்.. ஒரு 50 கிராம் வெட்டிவேர் எடுத்துக்கோங்க. மண்பானை தண்ணியில நைட்டு ஊற  வச்சிட்டு காலையில எடுத்து குடிங்க  உங்க உடம்போட களைப்பை நீக்கி புத்துணர்ச்சி கொடுக்கும்.. அது கூட கொஞ்சம் எலுமிச்சம்  பழ சாற்றையும் சேர்த்து அருந்தலாம்.. வேற லெவல் டேஸ்ட்டா இருக்கும்.


வெட்டிவேர் சிரப், சர்பத்து அடிக்கடி குடிப்பதால்  உடல் சூடு, நா வறட்சி  இல்லாமல் தவிர்க்கலாம். இந்த வெட்டிவேரை   தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம்  உடல் புத்துணர்ச்சி அடைகிறது. நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் நல்ல  தீர்வு கிடைக்கும்.  நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். 


வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்... இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள்  ஒரு வெள்ளை துணியில்  வெட்டிவேரை வைத்து கட்டி தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த வெட்டிவேர் வாசத்தை சுவாசித்துக் கொண்டு கொண்டு தூங்கும் போது நன்றாக தூக்கம் வரும்.


அழகுக்கு அழகு சேர்க்கும்:-


சரும அழகுக்கும் பாதுகாப்பிற்கும் வெட்டிவேர் பெரும் பங்காற்றுகிறது.. ஒரு சிலருக்கு வெயில் காலத்துல பருக்கள் அதிகமாக வரும். அதற்கு வெட்டிவேரை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி  அதனுடன் கொட்டை நீக்கிய கடுகாயையும் ஒன்றாக சேர்த்து இரவில் சுடுநீரில் ஊற வைத்து  மறுநாள் அதனை அரைத்து பருக்களின் மீது  தடவி வரும்போது பருக்கள் இருந்த இடம் தெரியாமலே போய்விடும்.


சிலருக்கு முகத்தில் எப்பவும் எண்ணெய் வடிஞ்ச மாதிரி எண்ணெய் பசையாக இருக்கும். அவங்க சீகைக்காய் பவுடருக்கு பதிலா  வெட்டிவேர் பவுடர் பயன்படுத்தினால் முகத்துல எண்ணெய் வழியாது,  முகமும் மொழு மொழுன்னு அழகாக மாறிவிடும்.. அது மட்டும் அல்லாமல்  நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய வடுக்கள் தழும்புகள் போன்றவற்றிற்கு  வெட்டிவேர் எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தும் போது  அது மறைந்து  விடும்..


வெயில் காலத்துல எல்லாருமே சந்திக்கிற முக்கிய பிரச்சினை வியர்வை  மற்றும் அரிப்பு தான்.. அதுக்கு   வெட்டி வேரை ஊறவைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குளிக்கும் போது  வியர்வை மற்றும் அரிப்பில் இருந்து  பாதுகாத்துக் கொள்ளலாம்..


கைவினைப் பொருள்கள்:-




கைவினை கலைஞர்களுக்கு  வாழ்வாதாரமாகவும் இந்த வெட்டிவேர் இருந்து வருகிறது.. இதிலிருந்து மாலைகள் , கடவுளின் உருவங்கள், காலணிகள்,  கூடைகள், பாய்கள் தலையணைகள், மூலிகை எண்ணெய்கள் போன்ற எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. அதன் எண்ணெயை  பிரித்து எடுத்து வாசனை திரவியங்கள் செய்கின்றனர்.


அது மட்டுமல்லாமல்  இதை பூஜை அறையில்  பூஜைக்கு பயன்படுத்தும் போது ஒரு தெய்வீக ஆற்றல் அந்த வீட்டிற்கு கிடைக்கும்.. பூஜை அறையில் எப்பொழுதும்  வெட்டிவேரின் வாசம் நிரம்பி இருக்கும் பொழுது  மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்... வீட்டில் செல்வமும் சேரும். வீட்டின் நிலை வாசலில் வெட்டிவேரில் தோரணம் செய்து தொங்கவிடும் போது கண் திருஷ்டி போன்ற  எதிர்மறை சக்திகள் நுழைவதை தடுக்கும்..


இந்த வெட்டிவேர் வெறும் வியாபாரத்திற்கு மட்டும் பயன்படும் பொருள் இல்லை. நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அது மட்டும் இல்லீங்க, உப்பு நீரை நல்ல நீராக மாற்றக்கூடிய சக்தி இந்த வெட்டிவேருக்கு இருக்குது..


வீட்டு வைத்தியத்தில் இருந்து ஆன்மீகம் வரைக்கும் இந்த வெட்டி வேரோட  மகிமையை சொல்லிக்கிட்டே போகலாம் , அவ்வளவு மேட்டர் அதில் கொட்டிக் கிடக்கு.. இன்னும் என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க.. இவ்வளவு மருத்துவ குணமும், மகத்துவம் வாய்ந்த இந்த வெட்டி வேரை  உங்க வீட்ல எப்பவும் வாசம் வீசும் படி  வச்சுக்கோங்க .. மனசும் சந்தோஷமா இருக்கும்.. உடல் நலமும் கலகலப்பாக இருக்கும்.. சரிங்களா!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்