- ஹம்ரிதா
எல்லோரும் நம்மை மதிக்கதக்க வாழ்வை வாழ முயற்சிக்கையில், நடுவில் எங்கோ நம்மை நாமே தொலைகின்றோம்.. அதற்காக ஆழ் மனதின் யோசனை இல்லா கிறுக்கு சேட்டைகளை செய்யலாம் என்று இல்லை..!!
உண்மையில் நம்மை நமக்கே அடையாளம் காட்டும் குணங்களை மறைத்து, மறந்து.. ஒப்பனை முகமூடிகளை செதுக்கி, உண்மையில் அழகான முகத்தை மறைத்து, முகம் எது!! முகமூடி எது!! என்று உங்களுக்கே குழப்பம் எழுப்பும் வகையில் ஒரு போலி வேஷம் அவசியம் இல்லை..
உண்மையான நம்மை, நம் குறை நிறைகளுடன் ஏற்றுக்கொண்டு அழகான அன்பு காட்டும் உயிர்களும் இருக்கிறார்கள்.. ஆனால் அந்த போலி முகமூடி அடையும் சுற்றத்தையே விரும்பி நாடுகிறோம்.. பிறகு உண்மை முகம் புலப்படாமல் பயந்து அந்த சுற்றத்தில் வாழ்கிறோம்..
அப்படி இருக்கையில் நமது உண்மை அன்பர்கள் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சம் விலகுவதை கவனிக்க தவற நேரிடுகிறது.. வாழ்வின் ஒரு கட்டத்தில் நான் யார்?? என் பயணம் என்ன?? என் காரணம் என்ன?? என்று மனது எழுப்பும் பல கேள்விகளில் மூழ்கும் போதுதான் என் சுற்றம் எது!! என்பது புரியும்..
ஏன்னென்றால், கடினமான நேரங்களில் நம்மை மறந்து முகமூடி உடைத்து முகம் அது வெளி வரும், முகமூடி விரும்பிகள் யாவரும் முகம் தன்னை ஏற்க மறுத்து விலகையில், உன்னை உண்மையாக நேசிப்பவர் மட்டும் கை கொடுக்க முன் வருவர்..
கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை.. அண்ணாமலை குற்றச்சாட்டு
நாம் உண்மையாக இருக்க வேண்டியது நம் சுற்றத்திற்காக நம் அன்பர்களுக்காக என்றால்... இல்லை.. நாம் உண்மையாக உண்மை தன்மை பொருந்தியவராக இருக்க வேண்டிய ஒரே முக்கிய காரணம் நம் சுயம் மட்டுமே..
நம்மை மறைத்து நாம் போலியாக இருப்பது நமக்கு நாமே செய்யும் துரோகம்.. நம் தனித்துவத்தை வெளிக்காட்ட மறுப்பதும், அசல் தன்மையை மறைப்பதும் நமக்கு நாமே இழைக்கும் தவறு ஆகும்..
ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தனித்துவம் கொண்டுள்ளோம்.. உலகில் எவ்வளவு கோடி மக்கள் இருந்தாலும் உன்னை போல தான் நானும் என்றோ, அவரை போல தான் நீயும் என்றோ எவர் சொன்னாலும் நம்பாதீர்கள்.. உங்கள் பிறப்பு முதல் இந்நாள் வரையில் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் செதுக்கி தான் நீங்கள் உருவாகி உள்ளீர்கள்..
அப்படி பட்ட சுயத்தை உரிமையோடு பாதுக்காத்து வையுங்கள்.. எங்கும் எவரிடமும் தைரியமாக உண்மையாக இருங்கள்.. போலி என்ற சொல்லையே மனதில் இருந்து போக செய்யுங்கள்.. உண்மை நிலைக்கும் இடத்தில் கண்டிப்பாக மன நிம்மதியும் நிலவும்..
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}