மும்பை: 2024ம் ஆண்டு பல முக்கியத் தொடர்களை இந்திய கிரிக்கெட் அணி இழந்திருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் அப்செட்டாகியுள்ளதாம். இதையடுத்து பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாம் பிசிசிஐ. சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது தொடர்பாகவும், இந்த இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
2024ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய மகிழ்ச்சியைத் தரவில்லை. வருட ஆரம்பத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற சந்தோஷம் மட்டுமே இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் வருடத்தின் கடைசி மாதங்களில் பல சொதப்பல்களை இந்திய அணி செய்து விட்டது.
முதலில் தாயகத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாத் தொடரில் அடிலைட் மற்றும் மெல்போன் போட்டிகளில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்தியா. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியுமா என்ற சந்தேக நிலையில் இந்தியா உள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இன்னும் ஒரு போட்டி உள்ளது. இதை வென்றால் மட்டுமே தொடரை டிரா செய்ய முடியும். தோற்றால் தொடரை ஆஸ்திரேலியா வென்று விடும்.
இதற்கிடையே, டெஸ்ட் தொடருக்கு மத்தியில் முக்கிய நட்சத்திர வீரரான ஆர். அஸ்வின் அதிரடியாக ஓய்வை அறிவித்து விட்டு வெளியேறி விட்டது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவருக்குரிய முக்கியத்துவத்தைத் தர கம்பீரும், ரோஹித் சர்மாவும் தவறியதே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால்தான் அஸ்வின் அதிருப்தி அடைந்து ஓய்வு முடிவை அறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து பல குழப்பங்கள் நிலவுவதால் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மாவிடம் விசாரணை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்தத் தொடரில் ரோஹித் சர்மாவும் சரிவர விளையாடவில்லை. அவரது பேட்டிங் மோசமாக இருக்கிறது. கேப்டனாக அவர்தான் முதலில் பொறுப்பாக ஆட வேண்டும். ஆனால் அவரது ஆட்டம் இளம் வீரர்களுக்கு கொஞ்சம் கூட ரோல் மாடலாக இல்லை என்பதால் அதுவும் பிசிசிஐயை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.
அனேகமாக இந்தத் தொடரோடு ரோஹித் சர்மா ஓய்வு பெறக் கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஒரு வேளை அவர் ஓய்வு பெறாவிட்டாலும் கூட, அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து இருப்பதாக நம்பப்படுகிறது. அவரை கேப்டன் பதவியிலிருந்து மாற்றி விட்டு வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை கேப்டானாக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
ரோஹித் சர்மாவை பல்வேறு மூத்த வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்காமல் அவர்களது வாய்ப்புகளை ரோஹித் சர்மா தட்டிப் பறிப்பதாகவும் ஒரு புகார் உள்ளது. குறிப்பாக மெல்போர்ன் போட்டியில் சுப்மன் கில்லை எடுத்து விட்டு ரோஹித் சர்மா விளையாடியதை பலரும் தவறு என்று சொல்கிறார்கள்.
பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்ததும் பிசிசிஐ விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் தற்போது கம்பீரும், ரோஹித் சர்மாவும் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}