மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்திருப்பதால் பிசிசிஐ குழப்பமடைந்துள்ளது. அதை விட முக்கியமாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் வந்துள்ளதுதான் வேடிக்கையாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். அவரது பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடைகிறது. மீண்டும் அப்பதவியில் தொடர அவர் விரும்பவில்லை. அதேபோல ரிக்கி பான்டிங், கெளதம் கம்பீர் என பல முன்னணி வீரர்களும் இந்தப் பதவிக்கு அலசப்பட்டனர். ஆனால் அவர்களும் கூட ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. வி.வி.எஸ்.லட்சுமண் பயிற்சியாளர் ஆவார் என்று கருதப்பட்டது. ஆனால் அவரோ விண்ணப்பமே கொடுக்கவில்லை. இப்படி முன்னணி முன்னாள் வீரர்கள் எல்லாம் ஆளை விடுங்க சாமிகளா என்று தெறித்து ஓடும் அளவுக்கு நிலைமை உள்ளது.
இந்த நிலையில் கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பங்களைப் பெற்றது பிசிசிஐ. இதுவரை 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. ஆனால் வந்தவற்றில் பெரும்பாலானவை போலியான விண்ணப்பங்கள் என்பதுதான் கொடுமையானது. பலரும் போலியான பெயர்களைப் பயன்படுத்தி விண்ணப்பங்களை தட்டி விட்டுள்ளனர். இதில் பெரிய காமெடி என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோரது பெயர்களிலும் கூட விண்ணப்பங்கள் வந்துள்ளதுதான். சச்சின் டெண்டுல்கர், தோனி பெயர்களிலும் விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம்.
இதேபோலத்தான் கடந்த 2022ம் ஆண்டிலும் கிட்டத்தட்ட 5000 போலி விண்ணப்பங்கள் வந்திருந்தன. அப்போது இமெயில் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றது பிசிசிஐ. தற்போது கூகுள் பார்ம் மூலமாக பெற்றுள்ளது.
சரி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு என்ன தகுதி?
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவும், அதற்கு தேர்வு செய்யப்படும் சில வரையறைகளை பிசிசிஐ நிர்ணயித்துள்ளது அதாவது குறைந்தபட்சம் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடமாவது இந்திய தேசிய அணியில் இடம் பெற்று முழு நேர வீரராக இருந்திருக்க வேண்டும்.
இந்தத் தகுதியுடன் கூடியவர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களைத்தான் பிசிசிஐ பரிசீலித்து உரியவரை தேர்வு செய்யும். ஆனால் வந்துள்ள விண்ணப்பங்கள் பலவும் கூட போலியானதுதான்.
ஒரு டாக்டர் விண்ணப்பம் கொடுத்துள்ளாராம். அவர் லோக்கலில் கிரிக்கெட் விளையாடக் கூடியவராம். தனக்கும் உரிய தகுதி இருப்பதாக கூறி அவர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளாராம். தன்னைப் பற்றி அவர் அறிமுகம் செய்து இணைத்துள்ள கடிதமும் செம காமெடியாக இருக்கிறதாம். நான் பள்ளிக்கூடத்தில் விளையாடியிருக்கிறேன். எனது பந்தையெல்லாம் தொடக் கூட முடியாது.. அதாவது எந்த பேட்ஸ்மேனாலும் அதை அடிக்கவே முடியாது. நான் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேனும் கூட. ரொம்ப ஸ்டைலா விளையாடுவேன். என்னை எடுத்து மட்டும் பாருங்க.. வேலையைப் பார்த்து அசந்துருவீங்க என்று சீரியஸாக காமெடி செய்துள்ளாராம் அந்த டாக்டர்.
செலக்ஷன் பிராசஸ் ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கும்.. பார்க்கலாம், அடுத்த ராகுல் டிராவிட் யார் என்பதை.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}