வாஷிங்டன்: உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டுள்ள நிலையில், பாலஸ்தீனியர்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் பல ஆண்டு காலமாக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கும் கதை. பாலஸ்தீன வரலாறு தெரியாமல் இன்று பலரும் இஷ்டத்துக்கு கதை விட்டுக் கொண்டுள்ளனர், தங்களது ஆதரவு நிலைப்பாடுகளை தப்புத் தப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே கூட பலருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை.
ஹமாஸ் போராளிகள் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலுக்கு பழிவாங்குவதாக கூறி, அவர்களை அழிப்பதாக கூறி பாலஸ்தீனத்தையே அழிக்க இறங்கி விட்டது இஸ்ரேல். காஸா நகரை குண்டு வீச்சாலும், ராக்கெட் வீச்சாலும் சின்னாபின்னமாக்கி வருகிறது இஸ்ரேலிய படைகள்.. அடுத்து ராணுவம் உள்ளே புகுந்து மொத்த காஸா நகரையும் தன் வசம் எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழும் குரல்களையும் பலர் முடக்கி ஒடுக்கி விடுகிறார்கள். இந்தப் பின்னணியில் பாலஸ்தீனம் குறித்தும் அமெரிக்காவிலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டுள்ளது. அது பராக் ஒபாமாவின் குரல்.
பராக் ஒபாமா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் மீதான மோசமான தீவிரவாதத் தாக்குதல் அத்தனை அமெரிக்கர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோபப்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்ற செயலை ஏற்கவே முடியாது. இறந்தவர்களுக்காக நாம் இரங்கல் தெரிவிக்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து நிற்கிறோம். பிணைக் கைதிகளாக தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இஸ்ரேலுடன் நாம் உறுதிபட இணைந்து நிற்கிறோம்.
ஹமாஸ் அமைப்பு முற்றிலும் செயலிழக்க வேண்டும். இஸ்ரேல் தன்னை தீவிரவாதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ள அதே நேரத்தில், இஸ்ரேலியர்களுக்கு மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்களுக்கும் நீடித்த அமைதி ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பராக் ஒபாமா.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}