ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பிய.. 18 ஓடிடி தளங்களை முடக்கியது மத்திய அரசு!

Mar 15, 2024,10:52 AM IST

புதுடில்லி: ஆபாசக் காட்சிகளை ஓளிபரப்பி வந்த 18 ஒடிடி தளங்களை முடக்கி  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


ஒடிடி தளங்கள் சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் வளர்ச்சி காரணமாக பல படங்கள் நேரடியாக ஒடிடி தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஒடிடி தளங்களுக்கு சென்சார் இல்லாததினால் அதிகளவில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம்  பெற்று வருதாக தகவல்கள் பரவியன. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தாத நிலையில், தற்பொழுது நடவடிக்கை தொடங்கியுள்ளது.


ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஒளிபரப்பி  வந்த ஓடிடி வலைத்தளங்கள், செயலிகள், சமூக வலைத்தள கணக்குகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 18 ஒடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஜபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஜாட்ஸ் விஜபி உள்ளிட்டவைகளும், 10 செயலிகள், 57 வலைத்தள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.




மேலும் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. முடக்கப்பட்ட  ஒடிடி தளங்களில் ஒரு ஓடிடி செயலியை ஒரு கோடி பேரும், 2 ஓடிடி செயலிகளை 50 லட்சத்திற்கு அதிகமானோரும் கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளனர். 


இந்த ஓடிடி தளங்கள் வலைத்தளங்களில் முகநூல், இன்ஸ்டாகிராம் , எக்ஸ் மற்றும் youtube பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சமூக வலைதளங்களை மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்