நோட் பண்ணிக்கோங்க மக்களே... தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

Apr 01, 2025,06:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் பத்து நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களில் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகள் விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டு காணப்படும். இந்த வேறுபாடு எதனால் என்றால், அந்த அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள்  பொருத்து மாறுபட்டு வருகிறது.


இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில்  10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஏப்ரல் - 1 வருட கணக்கு நிறைவு நாள் என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று செயல்படாது. 




ஏப்ரல் - 10ம் தேதி  மகாவீர் ஜெயந்தி


ஏப்ரல் - 14ம் தேதி  தமிழ் புத்தாண்டு


ஏப்ரல் - 18ம் தேதி புனித வெள்ளி


ஏப்ரல் 6, 12, 23, 20, 26, 27 ஆகிய தேதிகள் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகள் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த 10 நாட்களிலும் வங்கிகளின் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து திட்டமிட்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்