வங்கதேசத்தில் பயங்கரம்.. 24 பேர் உயிருடன் தீவைத்து எரிப்பு.. மாஜி கிரிக்கெட் கேப்டன் வீட்டுக்கும் தீ

Aug 06, 2024,06:28 PM IST

டாக்கா: வங்கதேச வன்முறை வேறு ரூபத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வெறித்தனமான தாக்குதல்கள், தீவைப்பு, கலவரம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்த வன்முறையை யாரோ சிலர் திட்டமிட்டு தூண்டி வருவது போல தோன்றுகிறது. இன்று ஆளும் அவாமி லீக் கட்சித் தலைவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல் தீவைத்து எரிக்கப்பட்டதில் 24 பேர் பரிதாபமாக உயிருடன் கருகிப் பிணமானார்கள்.


அதேபோல தற்போது அவாமி லீக் கட்சி சார்பில் எம்.பியாக இருப்பவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான மோர்டசாவின் வீட்டையும் சூறையாடி தீவைத்து எரித்து விட்டனர். வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பெரும் சர்வதேச சதித் திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.




வங்க தேசத்தில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறை போராட்டத்தில் சிக்கி இதுவரைக்கும் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். 


தற்போது ராணுவ ஆதரவுடன் இடைக்கால ஆட்சி அமையவுள்ளது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அங்கு வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. மாறாக முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கிரிக்கெட் வீரர் வீடு எரிப்பு




வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், குல்னா மாவட்டத்தில் உள்ள நரைல் 2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ராஃபே மோர்தசாவின் வீட்டை கொள்ளை அடித்து தீ வைத்துள்ளனர் போராட்டக்காரர்கள். இவர் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது 117 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 


தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 390 விக்கெட்களை வீழ்த்தி 2,955 ரன்களை எடுத்திருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2018ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது வீடைத்தான் கொளுத்தி விட்டனர்.


நட்சத்திர ஹோட்டலுக்கு தீ - 24 பேர் பலி




அதேபோல ஜோஹார் மாவட்டத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷாஹின் சக்லதாருக்குச் சொந்தமான ஸபீர் சர்வதேச ஹோட்டல் உள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலான இங்கு ஏராளமானோர் தங்கியிருந்தனர். இந்த ஹோட்டலுக்கு கலவரக்காரர்கள் தீவைத்து விட்டனர். இதில் சிக்கி 24 பேர் உயிருடன் பிணமானார்கள். அவர்களில் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இதை விட அதிக எண்ணிக்கையில் உயிர்ப்பலி இருக்கும் என்று ஹோட்டல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டினர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டலில் இந்தியர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா என்று தெரியவில்லை. ஹோட்டலின் தரைத் தளத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தீவைத்ததாக வங்கதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல நாடு முழுவதும் அவாமி லீக் கட்சியினருக்குச் சொந்தமான வீடுகள், வணிக தலங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை தீ வைத்துக் கொளுத்தி வருகின்றனர். மேலும் அவாமி லீக் கட்சியின் அலுவலகமும் ஏற்கனவே சூறையாடப்பட்டு விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்