பெங்களுருவில் இன்று 9 மணி நேரம் தண்ணீர் சப்ளை கட்.. பகல் 1 மணி முதல்.. ஏன் தெரியுமா?

Sep 21, 2024,01:10 PM IST

பெங்களூரு :   பெங்களூருவில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு பல மாதங்களாக பாடாய் படுத்தி வரும் நிலையில் இன்று 9 மணி நேரம் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.


பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்குவதற்காக காவிரி நீரை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 5ம் கட்ட பணிகளாக தற்போது தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடத்தப்பட உள்ளது. நகரில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இந்த பணிகளுக்காக பெங்களூருவில் இன்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 9 மணி நேரம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதனால் சுப்ரமணிய நகர், பிரகாஷ் நகர், சங்கர்நகர், நந்தினி லேஅவுட், சாமுண்டாபுரா, பார்வதிநகர், ராஜாஜிநகர், தசரபல்லி, லட்சுமண்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் தண்ணீர் தேவையை போக்கும் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பைப்லைன் வேலைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், இதற்கு குடியிருப்பு வாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்