Vandhe Bharat: பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு.. விரைவில்..  மக்களுக்கு Happy News!

Dec 12, 2023,06:37 PM IST

- மஞ்சுளா தேவி


கோவை: பெங்களூரு டூ கோயம்பத்தூர் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


சென்னைக்கு அடுத்து, கோவை ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் மாநகரம். கோவை மற்றும் பெங்களூர் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளும் உள்ளன. அதிக அளவில் இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தும் உள்ளது. இரு நகரங்களுக்கு இடையே உள்ள திருப்பூர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில்  தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. 


ஏற்கனவே கோவை - பெங்களூர் இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது காலையில் இயக்கப்படும் ரயிலாகும். இது 7 மணி நேர பயணமாகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதை விட குறைந்த நேரத்தில் இரு ஊர்களுக்கும் பயணிக்க முடியும். மேலும் அதிக அளவிலான மக்களும் இதைப் பயன்படுத்த முடியும். இந்தத் தகவலை வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.




கோயம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு ஒரு ரயில் அறிமுகமானால், அது கோவைக்குக் கிடைக்கும் 2வது வந்தே பாரத் ரயிலாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டின் 4வது வந்தே பாரத் ரயிலாகவும் அது அமையும். ஏற்கனவே சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு ரயிலும், சென்னையிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு இன்னொரு ரயிலும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பெங்களூர் டூ கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படும் என்ற தேதியும், நேரமும் இன்னும் அறிவிக்கவில்லை.  இருப்பினும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்