பெங்களூரு: பெங்களூருவில், பெண்கள் அணியும் நைட்டியைப் போட்டுக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகுந்து விலை உயர்ந்த ஷூ, செருப்புகளை ஒரு நபர் திருடி வருகிறார். இதுகுறித்து சிசிடிவி கேமரா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டில் எப்பவுமே திருடர்கள்தான் ரொம்ப மூளையை செலவழிப்பார்கள் போல.. தினுசு தினுசான திருட்டு முறைகளை அமல்படுத்தி, போலீஸாரின் தலையை சுற்றி வைத்து விடுகிறார்கள் சமயத்தில். "கும்பலா உக்காந்து சூட் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று நினைக்கும் அளவுக்கு இவர்களின் டெக்னிக் நம்மளை திகைக்க வைக்கிறது.
பெங்களூரில் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ஒரு திருடன் பிடிபட்டான்.. போலீஸாரின் நைட் ரவுண்ட்ஸின்போது அவன் சிக்கினான். டிப்டாப்பாக இருந்த அவன் புல்லட்டில் சந்தேகத்திற்கு இடமாக வந்தபோது சிக்கினான். பிடித்து விசாரித்தபோது அவன் திருடன் என்றும், வெறும் புல்லட் பைக்குகளை மட்டுமே அவன் திருடுவான் என்றும் தெரிய வந்தது. தமிழ்நாட்டிலிருந்து இரவு பெங்களூருக்கு வருவானாம்.. இரவில் ஏதாவது புல்லட்டை திருடிக் கொண்டு அந்த வண்டியிலேயே தனது சொந்த ஊருக்குப் போய் விடுவான். அதை விற்றுக் காசாக்கி விட்டு ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு, அடுத்த வாரம் மீண்டும் வருவான். புல்லட்டைத் தவிர வேறு எந்த பைக்கையும் அவன் திருட மாட்டான். அதாவது வீக் என்ட் மட்டும் வந்து திருடி விட்டு வாரம் முழுவதும் என்ஜாய் செய்வது அவனது வழக்கமாக இருந்தது.
இப்படி விதம் விதமான திருடர்கள் உலா வந்த பெங்களூரில், இப்போது இன்னும் ஒரு ஒரு நூதனத் திருடன் உலா வந்து கொண்டுள்ளான். இந்தத் திருடன் ஷூ, செருப்பை மட்டும் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்ன காமெடி என்றால் பெண்கள் அணியும் நைட்டியை அணிந்து கொண்டு இந்த நபர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இரவு நேரத்தில் இந்த நபர் வருகிறார். பெண் போன்ற தோற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக நைட்டியுடன் இந்த நபர் வருகிறார். அப்போதுதான் சிசிடிவியில் பெண் திருடுவது போல "அலிபி" ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்த டெக்னிக்.
அள்ளிப் போடு அள்ளிப் போடு!
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நைஸாக நுழையும் இந்த நபர் வீடுகளுக்கு முன்பு கழற்றி விடப்பட்டுள்ள காஸ்ட்லியான செருப்புகளை மட்டும் குறி வைத்து திருடுகிறார். பெரிய கோணிப் பையை கையுடன் எடுத்து வரும் அந்த நபர் அதில் செருப்புகள், ஷூக்களை "அள்ளிப் போட்டு"க் கொண்டு செல்கிறார்.
சர்வ சாதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் நுழைவதும், செருப்பு, ஷூக்களை அள்ளிக் கொண்டு நிதானமாக அந்த நபர் செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் திருடிய பிறகு வெளியே வந்து நைட்டியை கழற்றியபோதுதான் அந்த நபர் ஆண் என்பது தெரிய வந்தது.
பெங்களூரைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை வைத்து பெங்களூரு போலீஸார் தற்போது இந்த திருடனைப் பிடிக்க தீவிர வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!