ஒழுங்கா டிரஸ் பண்ணாட்டி ஆசிட் அடிப்பேன்.. மிரட்டிய இளைஞர்.. உடனடியாக வேலையிலிருந்து டிஸ்மிஸ்!

Oct 11, 2024,10:57 PM IST

பெங்களூரு: பத்திரிகையாளர் மனைவியை ஒழுங்காக டிரஸ் செய்யுமாறும், இல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டி வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிய பெங்களூரு நபர் வேலையிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. 


பெங்களூரைச் சேர்ந்தவர் நிக்கித் ஷெட்டி. இவர் எடியோஸ் என்ற நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் InUth தளத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் ஷபாஸ் அன்சர். இவருக்கு வாட்ஸ் ஆப்பில் நிக்கித் ஷெட்டி ஒரு மெசேஜ் போட்டிருந்தார். அதில் உனது மனைவியை ஒழுங்காக டிரஸ் போடச் சொல்லு. இல்லாவிட்டால் அவரது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டியிருந்தார்.




இதனால் அதிர்ச்சி அடைந்த ஷபாஸ் அன்சர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக பதிவு போட்டிருந்தார். எனது மனைவியை இந்த நபர் மிரட்டுகிறார். இவர் சொல்வது போல நடப்பதற்குள் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி கர்நாடக மாநில டிஜிபி உள்ளிட்டோரை அதில் டேக் செய்திருந்தார். மேலும் இந்த நபர் எடியோஸ் சர்வீஸஸ் என்ற ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அதுதொடர்பான தகவல்களையும் அவர் ஷேர் செய்திருந்தார்.


இதையடுத்து எடியோஸ் நிறுவனத்திற்கு பலரும் புகார்களை அனுப்பி நிக்கித் ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதையடுத்து தற்போது எடியோஸ் நிறுவனம் நிக்கித் ஷெட்டியை 5 ஆண்டுகளுக்கு வேலையை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தங்களது ஊழியர் இதுபோல நடந்து கொண்டது  அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக கூறிய எடியோஸ் நிறுவனம், இதை ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளது.




நிறுவனத்தின் சார்பில் தற்போது போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது. விரைவில் நிக்கித் ஷெட்டி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. 


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷபாஸ் அன்சர் கூறுகையில் எனது மனைவி கியாதிஸ்ரீயின் உடை குறித்து மிரட்டிய நபருக்கு வேலை போயுள்ளது. அவர் வேலை பார்த்த நிறுவனம் துரித கதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்