விரட்டும் "கோச்சடையான்" வழக்கு.. லதா ரஜினிகாந்த்துக்கு பிடிவாரண்ட்.. ஜாமீன் அளித்தது கோர்ட்!

Dec 26, 2023,03:53 PM IST

பெங்களூரு: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான மோசடி வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பெங்களூர் மாநகர முதலாவது தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்.த் கடந்த 2014ம் ஆண்டு கோச்சடையான் என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டது.  இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் மீடியா ஒன் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் ஒன்றாகும்.  படத் தயாரிப்புச் செலவுகளுக்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் மீடியா ஒன் நிறுவனம் ரூ. 6.2 கோடி கடன் வாங்கியிருந்தது.


இந்தக் கடன் தொகைக்கான உத்தரவாதத்தில் லதா ரஜினிகாந்த்தும் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் வாங்கிய கடனை மீடியா ஒன் நிறுவனம் திருப்பித் தரவில்லை. இதையடுத்து மீடியா ஒன் நிறுவனத்தின் முரளி மற்றும் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டிருந்த லதா ரஜினிகாந்த் ஆகிய இருவர் மீதும் பெங்களூரு ஹலசூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஆட் பீரோ நிறுவனம் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் லதா ரஜினிகாந்த், முரளி மீது வழக்குத் தொடர்ந்தனர். 




இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


இதையடுத்து இன்று லதா ரஜினிகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது ஜாமீன் வழங்கக் கோரி அவர் சார்பில் மனு செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த்  கரிம்மன்னவர், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.  பின்னர் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்