ஓபிஎஸ்சுக்கு விதித்த தடை தொடரும்: சென்னை உயர்நீதி மன்றம்

Jan 11, 2024,05:43 PM IST

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சுக்கு அதிமுக பெயர்,கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதித்த தடை தொடரும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.


ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் மிக முக்கியமான நபராக வலம் வந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் வலது கரம் போல திகழந்தவர். ஆனால் தற்போது அதிமுகவில் தடமே இல்லாமல் போய் விட்டார். அவருக்கு இருந்த அதிமுகவின் எல்லா அடையாளங்களும் பறிக்கப்பட்டு விட்டது. 


ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவருக்கு, ஜெயலலிதாவால் அடுத்த வாரிசு என அடையாளம் காட்டப்பட்டவருக்கு இந்த நிலையா என்று அவரது ஆதரவு தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். ஒபிஎஸ்சும் விடாது போராடி வருகிறார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சிறிது காலம் பிரிந்து அரசியல் செய்தனர். பின்னர் சசிகலா வெளியேற்றத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்தனர். 




இந்த நிலையில், இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பூசலால் இருவரும் பிரிந்தனர். பிரிந்த பின்னர் அதிமுக எனக்கு என்று ஓபிஎஸ்சும், இல்லை அதிமுக எனக்கு தான் என்று இபிஎஸ்சும் மாறி மாறி கூறி வந்த நிலையில், பல கட்ட போராட்டத்திற்கு பின்னர்  ஒரு கட்டத்தில் அதிமுக இபிஎஸ்சின் வசம் வந்தது.  


தற்போது  எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம்  வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். 


இந்நிலையில் அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் இதை ஏற்றுக்கொள்ளாத ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தனிநீதிபதியிடம் மீண்டும் முறையிட அறிவுறுத்தி உள்ளனர். ஒபிஎஸ்சை தவிர்த்து மற்ற தொண்டர்கள் கூட கொடி, சின்னத்தை பயன்படுத்தலாம் ஓபிஎஸ் மட்டும் தான் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்