கேப்டன் பதவியை உதறுகிறார் பாபர் ஆசம்.. பாகிஸ்தானின் பெரும் தோல்வி எதிரொலி!

Nov 11, 2023,05:51 PM IST

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாபர் ஆசம் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதால் இந்த முடிவு என்று தகவல்.


மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பல முன்னாள் வீரர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் பாபர் ஆசம் கருதுகிறார். இதனால் அவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் முடிந்து தாயகம் திரும்பியதும் தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கான அரை இறுதி வாய்ப்பு மிக மிக மிக மங்கலாகவே உள்ளது. ஏதாவது அதிசயம், அற்புதம், ஆச்சரியம் நடந்தால்தான் அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். தொடர்ந்து பல முக்கியப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் இந்த நிலை.




இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலக பாபர் ஆசம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக முன்னாள் கிரிக்கெட் அணி தேர்வாளர் ரமீஸ் ராஜா உள்ளிட்ட சிலருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.


கொல்கத்தாவில் நடந்த பயிற்சியின்போது அங்கு வந்த ரமீஸ் ராஜாவிடம் இதுகுறித்து பாபர் ஆசம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த முடிவாக இருந்தாலும் நாடு திரும்பிய பின்னர் அறிவிக்க பாபர் ஆசம் திட்டமிட்டுள்ளாராம்.


அதேசமயம், உலகக் கோப்பைக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் பாபர் விலக வேண்டும் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளதாம். வீரராக மட்டும் தொடருமாறும் அவர்கள் அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனராம்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் ஆசம் இருக்கிறார். கடந்த   ஒன்றரை வருடமாக அவர் ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன அவர் கேப்டனாக ஜொலிக்கத் தவறி விட்டார். குறிப்பாக உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து விட்டது. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்