முன்னாள் எம்.பி. அசாருதீன்.. தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் போட்டி!

Oct 28, 2023,02:14 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான முகம்மது அசாருதீன் போட்டியிடுகிறார். அவர் ஜுபிளி ஹில்ஸ் தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளார்.


தெலங்கானாவில் தொடர்ச்சியான 2வது முறையாக கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலம் உருவானது முதலே பி.ஆர். எஸ் கட்சிதான் ஆட்சி புரிந்து வருகிறது. 


கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் கேசிஆர் கட்சி  119 இடங்களில் போட்டியிட்டது. அதில் 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. தற்பொழுது கேசிஆர் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி பலமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




இதனால் தெலங்கானாவில் தேர்தல் களம் அனல் பறக்கக் காணப்படுகிறது. மறுபக்கம் பாஜகவும் ஏதாவது செய்து கேசிஆர்  ஆட்சியை கீழிறக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எல்லோரையும் விட படு வேகமாக களமாடி வருகிறது. 


தெலங்கானாவில் சில வாரங்களுக்கு முன்னர் தான் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டார். கேசிஆர் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் இந்தாண்டு இறுதியில் நடக்கும் தெலங்கானா தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. நவ. 30ம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 55 வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், தற்போது 45 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன் இடம் பிடித்துள்ளார்.


அசாருதீன் எம்.பியாக இருந்தவர். அவர் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட காங். மேலிடம் சீட் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்