நடுவானில் நொறுங்கி விழுந்த அஜர்பைஜான் விமானம்.. கஜகஸ்தானில் பரபரப்பு.. 42 பேர் பலி

Dec 25, 2024,04:50 PM IST

அக்தாவ், கஜகஸ்தான்: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் கஜகஸ்தான் நாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 42 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. விமானத்தில் படுகாயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.


அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 70 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பக்கு என்ற நகரிலிருந்து புறப்பட்டு ரஷ்யாவின் குரோஸ்னி நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தாவ் விமான நிலையத்துக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நடு வானில் விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது.




இதையடுத்து அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டும் என்று விமானத்திலிருந்து கோரிக்கை வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அருகில் கடலோரமாக இருந்த இடத்தை நோக்கி விமானம் வேகமாக  கீழ் நோக்கி வந்தது. கடலில் விமானத்தை இறக்க விமானி திட்ட்டமிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் கடலுக்கு அருகில் உள்ள நிலப் பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துக் கொண்டது.


எம்பிரியார் இஎம்பி 190 ரக விமானமான இந்த விமானம் விபத்துக்குள்ளானதும், தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். விமானம் இரண்டாக பிளந்து கிடந்த நிலையில் அதன் மீது தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்க முயற்சிகள் நடந்தன. விபத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பலர் ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

news

ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

news

ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!

news

ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்