கருவறை திறந்தது.. புன்னகை பூத்த பால ராமர் சிலை.. பரவசத்தில் மக்கள்.. விழாக்கோலத்தில் அயோத்தி!

Jan 22, 2024,06:58 PM IST

அயோத்தி: அயோத்தில் ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புன்னகை பூத்த நிலையில் காணப்படும் பால ராமரின் சிலை சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 11 நாள் விரதம் இருந்து பல புண்ணிய பூமிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து இன்றைய பூஜையில் கலந்து கொண்டார்.


500 ஆண்டுகளுக்கு பின்னர் ராம பிரானுக்கு விழா நடைபெறுவது காணக்கிடைக்காத பெரும் பாக்கியமாக பலர் கருதி இவ்விழாவில் கலந்து கொண்டு ராமபிரான் அருள் பெற்று வருகின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மாலையில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


அரசியல் பிரமுகர்கள்,  திரை பிரலங்கள், முக்கிய பிரமுகர்கள் என 7000த்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக எட்டு திக்கும் மேளதாள வாத்தியங்கங்கள் முழங்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மனிதர்கள் காணக்கூடிய சொர்க்க பூமியாக அயோத்தி மாநகரம் இன்று விளங்குகிறது.




பிரமாண்ட கோவிலில் பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு தற்போது நடந்து முடிந்துள்ளது. கர்ப்ப கிரஷத்தில் உள்ள ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முடி இருந்த ராமர் கண்கள் திறக்கப்பட்டு, உயிர் பெறும் முக்கிய நிகழ்வாகும் இது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் இருந்த அயோத்தி இன்று புத்துயிர் பெற்றுள்ளது. தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமர். ராமர் பிறந்த இடத்தில்தான் இந்தக் கோவில் இப்போது கட்டப்பட்டுள்ளது. மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 


ராமர் கோவில் பண்டைய நகர கட்டிடக்கலையின் படி  அமைக்கப்பட்டுள்ளது.  380 அடி நீளமும் 280 அடி அகலம் 161 அடி உயரம் என சுமார் 27 ஏக்கர் நிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 3 மாடி அடுக்குகளும் 398 தூண்களும் 44 கதவுகளும் கொண்டுள்ளது. ஐந்து மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் கிழக்குப் புறம் அமைந்துள்ளது. சிங்க துவாரம் வழியாக 32 படிக்கட்டுகளைக் கடந்து பக்தர்கள் உள்ளே வரவேண்டும். 


சாய்வுப்பாதையும் அதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. கோயில் வளாகத்தில் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர், சிவன் ஆகியோருக்கு தனியே கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அன்னை அன்னபூரணி கோவில் வட திசையில் அமைந்துள்ளது. தென்புறத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.


கோயில் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர் காம்பாக்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க கிரானைட் கற்களால் 21 அடி உயரம் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்