சென்னை: சினிமாவைப் பொறுத்தவரை இன்றே பொங்கல் வந்து விட்டது.. தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர்1 (அச்சம் என்பது இல்லையே), விஜய் சேதுபதி நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் ஆகியவை இன்று திரைக்கு வந்துள்ளதால், தியேட்டர்களில் விழாக் கோலமாக உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணத்தால், ஒவ்வொரு வருடமும் பிரபல நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியிட திட்டமிடப்படும். இந்த வருடம் சூப்பர் நடிகர்களின் படங்கள் வரவில்லை. மாறாக, இளம் தலைமுறை சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
விஜய் சேதுபதி நடித்துள்ள மெர்ரி கிறிஸ்மஸ், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர்1 ( அச்சம் என்பது இல்லையே), சிவகார்த்திகேயனின் அயலான் ஆகியவை தியேட்டர்களை அதகளம் செய்து வருகின்றன.
கேப்டன் மில்லர்:
நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனுஷ், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்திப் கிஷன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆக்ஷன் கலந்த அதிரடி திர்ல்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
அயலான்:
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு மற்றும் பல நடித்துள்ளனர். இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டு சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் அமைந்துள்ளது.
பல சிக்கல்களை தகர்த்தெறிந்து இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிவகார்த்திகேயனும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து ரசித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
மெர்ரி கிறிஸ்மஸ்:
விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்மஸ் இந்திப் படமாகும். இப்படத்தை ஸ்ரீ ராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ராதிகா ஆப்தே, கத்ரீனா கைஃப், காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மிஷன் சாப்டர்1 (அச்சம் என்பது இல்லையே):
அருண் விஜய் நடிக்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் கிரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}