டில்லி : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் குறித்து தான் கணித்து கூறிய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறாகி விட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் டிவி லைவ் நிகழ்ச்சியில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குப்தா கதறி அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
2024ம் ஆண்டிற்கான லோக்சபா இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 01ம் தேதி நிறைவடைந்தது. அன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு மீடியாக்கள் வெளியிட்டன. இதில் பெரும்பாலான மீடியாக்கள் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தன. axis my india நிறுவனமும் கருத்து கணிப்பு வெளியிட்டது.
ஆனால் மற்றவர்களை விட இவர்கள் ஒரு படி மேலே போய், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 361 முதல் 401 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தது. அதே சமயம் இந்தியா கூட்டணி 131 முதல் 166 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 8 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் பாஜக கூட்டணிக்கு 300க்கும் கீழ்தான் சீட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணியே 230ஐத் தாண்டி விட்டது. மற்றவர்களுக்கு 18 சீட் வரை கிடைத்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவையொட்டி, இந்தியா டுடே டிவி நடத்திய டிவி லைவ் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் (நிர்வாக இயக்குநர்) பிரதீப் குப்தா கலந்து கொண்டார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து விவரித்து பேசிக் கொண்டிருந்த அவர், தங்களின் நிறுவனத்தின் கணிப்பு பொய்யாகி விட்டது. தாங்கள் கணித்ததை விட மிக குறைவான அளவிலேயே பாஜக கூட்டணி வென்றுள்ளது என கூறி கதறி அழுதார்.
நேரடி நிகழ்ச்சி ஒன்றில் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதீப் குப்தா அழுததை நிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக பேச்சாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரை சமாதானப்படுத்தி தேற்றிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}