- ஸ்வர்ணலட்சுமி
க்ரிஷ் ஸ்கூல் ப்ராஜெக்ட் போஸ்டர் டிசைன் "Say no to plastic " (சே நோ டு பிளாஸ்டிக்) பிளாஸ்டிக் வேண்டாம். அம்மா ஸ்ரேயா, ,மகன் கிருஷ் இருவரும் சூப்பர் மார்க்கெட் சென்று காய்கறிகள் ,பழங்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கினர் .வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஷ் அம்மா ...அம்மா..... என்று கூவிக்கொண்டே கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினான்.
அம்மா ....ஏன் ?..அம்மா... இப்போ சூப்பர் மார்க்கெட்டில் பேப்பர் பேக் கொடுக்கிறார்கள். சென்ற மாதம் காய்கறிகளை பிளாஸ்டிக் பையில் கொடுத்தனர், ஆனால் இன்று இல்லையே அம்மா என்றான். ஆமாம் கண்ணா இப்போது எல்லாம் காகிதப்பை தான் கொடுக்கின்றனர். ஏனெனில் ,பிளாஸ்டிக் கேரிபேக் யூஸ் பண்ணுவதனால் நிறைய கெடுதல்கள் வருகிறது அதனால்தான் கண்ணா என்று பதில் அளித்தாள் ஸ்ரேயா.
அம்மா... அப்போ எனக்கு ஒரு ஐடியா! இதை வைத்து என் ஸ்கூல் ப்ராஜெக்ட் செய்து கொடுக்கிறாயா? என்று கிருஷ் அம்மாவை கேட்டான்.
என்ன ப்ராஜெக்ட் கண்ணா... என்று கேட்டாள். அதற்கு அவன் "அம்மா ...போஸ்டர் மேக்கிங் டிசைன் "Say no to plastic" (சே நோ டு பிளாஸ்டிக் ) என்கிற தலைப்பில் செய்து வர என்னுடைய மிஸ் சொன்னார்கள் என்று கூறினான். உடனே ,அம்மா ஓ.கே.. செய்யலாமே ..என்று ஒரு சார்ட் பேப்பர் எடுத்து வரைய தொடங்கினாள்.
ஸ்ரேயா வரைந்து முடித்ததும், அவனுக்கு புரியும் படி அருமையாக விளக்கம் தந்தாள். பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லுதல் என்பது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல .ஒரு சமூகப் பொறுப்பு .பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை காப்பாற்றுவது நம் கடமை என்று அம்மா கிருஷ்க்கு சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்.
ஸ்ரேயா அவனுக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் வரைந்து வண்ணம் தீட்ட தொடங்கினாள் . பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லும் போது பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வதும் முக்கியம் தான் கண்ணா ...
அம்மா வரைவதை க்ரிஷ் ஆர்வமாக பார்த்து ரசித்துக்கொண்டு ,அவள் கூறுவதை அப்படியே கேட்டுக் கொண்டு ,கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்
.
அம்மா வரைந்து முடித்ததும் ஸ்ரேயாவை கிருஷ் கட்டிக்கொண்டு அம்மா... சூப்பராக இருக்கிறது என்று கட்டித் தழுவி முத்தமிட்டான்.அம்மா மகனை கட்டி தழுவிக் கொண்டு, அவள் வரைந்த ஓவியத்தை பார்த்து விளக்கம் கொடுத்தாள் .
*பிளாஸ்டிக் என்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள் . இது நிலம் கடல் மற்றும் பிற சூழல்களில் குவிந்து விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கின்றன.
* பிளாஸ்டிக் கழிவுகள் நிலம், காற்று ,மற்றும் நீரை மாசுபடுத்துகின்றன .அந்த கழிவுகளை உண்டு விலங்குகள் ,பறவைகள் மற்றும் மீன்கள் ,ஆமைகள் இறக்கின்றன. மனித உணவு சங்கிலி வழியாக சென்று மனித ஆரோக்கியத்தை பாதிக்கிறது .பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படும் ரசாயனங்கள் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.
அம்மாடியோ !...இத்தனை தீமைகள்.... அம்மா அப்போ பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க என்ன? செய்ய வேண்டும் அம்மா ...என்று கேட்டான் கிரிஷ்.
அதற்கு ஸ்ரேயா பதில் கூறினாள் -
* பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் .பிளாஸ்டிக் இல்லாத பாட்டில்கள், துணி பைகள், சணல் பைகள் பயன்படுத்துவது சிறந்தது. ஸ்டீல் பாட்டில்கள், பாத்திரங்கள் ,பீங்கான், கண்ணாடி ,பித்தளை, மண்பாண்ட பாத்திரங்கள் பயன்படுத்துவது சிறந்தது
* குப்பைகளை முறையான குப்பை தொட்டிகளில் போடுவது ,முறையற்ற முறையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
* பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு முறைகளை மாற்ற வேண்டும். மாசுபடாத காற்று ,நீர், அழகான பசுமையான மரங்கள் ,கனிகள் ,பூக்கள் கொடுக்கிறது. தூய்மையான நீரில் அழகான தாமரை பூக்கள் பூத்துக் குலுங்குகிறது பார்... இந்த ஓவியம் உனக்கு பிடித்திருக்கிறது அல்லவா ?என்று செல்லமாக கேட்டாள்.
அதற்கு கிருஷ் அம்மா ....சூப்பர் அம்மா... என் அம்மா ஆல்வேஸ் தி பெஸ்ட் (My mom is always the best) என்று மீண்டும் கட்டித் தழுவி முத்தமிட்டு அந்த சார்ட்டை பார்த்துக் கொண்டே இருந்தான். தனது ஸ்கூல் பேகில் அதனை பத்திரமாக வைத்துக் கொண்டு அழகான சிரிப்பு சிரித்தான்.
என்ன பிரண்ட்ஸ் உங்களுக்கு இந்த ஓவியமும் கதையும் பிடித்திருக்கிறதா.... மேலும் இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
அப்புறம் முக்கியமான விஷயம் தோழர்களே.. இன்னிக்கு புவி தினம்..
அப்புறம் முக்கியமான விஷயம் தோழர்களே.. இன்னிக்கு புவி தினம்.. ஏப்ரல் 22 உலக பூமி தினம்(WED) என்பது நினைவு கூறப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். பூமி தினம் முதன் முதலில் 1970 இல் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது .இது ஒரு பெரிய சுற்றுச்சூழல் இயக்கம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பூமி தினத்தை எப்படி அனுசரிப்பது என்பதற்கு பல வழிகள் உள்ளன. மரங்கள் நடலாம், மறுசுழற்சி செய்யலாம், பிளாஸ்டிக் வேண்டாம் என்று உறுதிமொழி எடுக்கலாம், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பல நடவடிக்கைகளில் ஈடுபடலாம். நாம் வாழும் பூமி நம் சொத்து பூமியை காப்பது நம் கடமை!.
பூமிக்குப் பெரிய எமனாக உருவெடுத்து வருகிறது இந்த பிளாஸ்டிக்.. எனவே இந்த நாளில் இனி பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே நிறுத்துவோம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்குங்க.. சரியா!
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
{{comments.comment}}