சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யூடியூபர் பெண் ஒருவர், இந்திய சமையல் குறித்து அவதூறாகப் பேசி இந்தியர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் சிட்னி வாட்சன். இவர் ஒரு டாக்டர். ஒரு எக்ஸ் தளப் பதிவில் ஒருவர், இந்திய உணவுதான் பெஸ்ட் என்று கூறியிருந்தார். அதற்கு கமெண்ட் அளித்த சிட்னி வாட்சன், இல்லவே இல்லை என்று கூறியிருந்தார். அத்தோடு நில்லாமல், உங்களது உணவில், கேவலமான மசாலாப் பொருட்களை சேர்த்தால் உணவு அதன் சிறப்பை இழந்து விடும் என்றும் இந்திய நறுமணப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் குறித்தும் கிண்டலடித்திருந்தார்.
அவ்வளவுதான் ஒரு பெரிய போரே தொடங்கி விட்டது அவரது எக்ஸ் தளத்தில். இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுக்காரர்களும் ஓடி வந்து விட்டனர். அத்தனை பேரும் டாக்டர் சிட்னியை வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால் சிட்னியோ தனது கருத்திலிருந்து பின்வாங்கவில்லை. இந்திய உணவுகள் மோசமானவை என்று மீண்டும் கமெண்ட் போட்டுள்ளார்.
இதுகுறித்து ஒது பதிவர் கூறுகையில், சிட்னி, அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்துதான் ரோமாபுரி மக்கள் நறுமணப் பொருட்களை வாங்கி பயன்படுத்தினர். இந்தியர்களின் எல்லா உணவிலும் நறுமணப் பொருட்கள் கலந்துள்ளன. இதுகுறித்து கிரேட் டாலமியே புகழ்ந்து எழுதியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், உங்களுக்குப் பிடிக்காவிட்டால் பிடிக்கலைன்னு சொல்லுங்க. அது தப்பில்லை. ஆனால் கீழ்த்தரமாக விமர்சிப்பது சரியல்ல என்று கண்டித்துள்ளார்.
சிட்னி இப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம் இந்திய உணவுகளுக்கு சர்வதேச அளவில் பல்வேறு விதமான அங்கீகாரம் கிடைத்தும் வருகிறது. டேஸ்ட் அட்லஸின் உலகின் மிகச் சிறந்த 100 உணவு வகைகளில் இந்தியாவிலிருந்து 4 வகையான உணவுகள் இடம் பெற்றுள்ளன. அதாவது பட்டர் கார்லிக் நான் (பூண்டு வெண்ணெய் ரொட்டி)க்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல பட்டர் சிக்கன் 43வது இடத்தையும், டிக்கி 47வது இடத்தையும், தந்தூரி சிக்கன் 48வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.
சிட்னி மேடம்.. ஒரு வாட்டி தமிழ்நாட்டுக்கு வாங்க.. சூடா மல்லிப் பூ இட்லியும், தொட்டுக்க கெட்டி சட்னியும் தந்து அசத்துறோம்.. சாப்பிட்டு அப்புறம் உங்க முடிவைச் சொல்லுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}