"பாஸ் பாஸ் உடம்புக்கு முடியலை பாஸ்.. இன்னிக்கு லீவு வேணும்".. A few moments later!

Jan 23, 2024,05:40 PM IST

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உடம்புக்கு முடியலை என்று பொய் சொல்லி லீவு வாங்கிய பெண், விமானம் ஏறி வேறு ஊருக்குப் போவதற்காக வந்தார். வந்த இடத்தில் அவர் சந்தித்த அதிர்ச்சி இருக்கே.. அதனால் அவர் பட்ட அந்த வேதனை இருக்கே.. அடடடடா... தொடர்ந்து படிங்க பாஸ்!


"ஏன்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை" - இது வாத்தியார்


"எங்க தாத்தா செத்துப் போயிட்டார் சார்.. அதான் வரலை" - இது நம்மில் பலர்!.. உண்மையில் அந்த தாத்தா நல்லா ஜம்முன்னு கரும்பைக் கடிச்சு துப்பிட்டிருப்பார் வீட்டில்!




இது மாதிரி நிறைய செய்திருப்போம்.. லீவு கேட்கும்போதுதான் நிறையப் பேர் பொய் பேசுவதும் அதிகமாக இருக்கும். வயித்து வலி.. தாத்தா செத்துப் போயிட்டார்.. பாட்டி செத்துப் போயிருச்சு.. அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை.. பஸ் லேட்டாயிருச்சு வர முடியலை.. இப்படி ஏகப்பட்ட லிஸ்ட் போடலாம்.. பொய்களை வைத்து!


இப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ஒருவர் பொய் சொல்லி சிக்கியுள்ளார்.  அந்தப் பெண்ணின் பெயர் லைலா சோரஸ். இவர் தான் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாளரிடம், எனக்கு உடம்புக்கு சரியில்லை. லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் உடனே சரி என்று ஒப்புதல் அளித்தார். உண்மையில் லைலா நன்றாகத்தான் இருந்திருக்கிறார்.


லீவு போட்ட கையோடு அவர் கிளம்பி வெளியூருக்குச் செல்வதற்காக விமான நிலையம் விரைந்தார். விமானத்தையும் பிடித்து அமர்ந்து விட்டார். எதேச்சையாக விமானத்துக்குள் பார்த்தபோது, அவருக்கு லீவு கொடுத்த மேலாளரும் இருந்துள்ளார்.  அதைப் பார்த்த லைலாவுக்கு அப்படியே ஷாக் ஆகி விட்டது. உடனே வேறு பக்கம் திரும்பிக் கொண்டு விட்டார் லைலா


இதுதொடர்பாக ஒரு வீடியோவை எடுத்து தனது டிக்டாக் பக்கத்திலும் அவர் போட்டுள்ளார். அதில், நான் பொய் சொல்லி விட்டு பிளைட்டைப் பிடித்து பயணம் செய்தால் அதே விமானத்தில் எனது மேனேஜரும் இருக்கிறார்.. அவர் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். நான் வேறு பக்கம் வழியாக உள்ளே வந்தேன். அவர் முன் பக்கமாக வந்துள்ளார். பார்த்திருக்க மாட்டார்னுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் லைலா.


இதைப் பார்த்து பலரும் கமென்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒருவர், இது என்னங்க பிரமாதம்.. எனக்கு ஸ்பெஷல் ஐட்டம் நடந்துச்சு. நான் லீவு போட்டுட்டு பர்ச்சேஸ் செய்யப் போயிருந்தேன்.  பொருட்களை வாங்கிட்டு பில் கட்டும் இடத்துக்குப் போனா.. பின்னாடி என்னோட மேனேஜர் மேடம் நிக்கிறாங்க.. அப்படியே தூக்கி வாரிப் போட்டுருச்சு எனக்கு என்று கூறி புலம்பியுள்ளார்.


என்னவோ போடா மாதவா..  அது அமிஞ்சிக்கரையா இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவா இருந்தாலும் சரி.. லீவு வேணும்னா.. டக்குன்னுக்கு நமக்குக் கை கொடுப்பது .."எனக்கு உடம்புக்கு முடியலை"!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்