சென்னை: குஷ்பு இட்லி, மதுரை இட்லி, மல்லிப் பூ இட்லி.. இப்படி விதம் விதமாக தமிழ் மக்களை கவர்ந்திழுப்பது இந்த இட்லிதான்.. அப்படிப்பட்ட இட்லியை, தனது கையாலேயே சுட்டு சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார் சென்னையில் உள்ள ஆஸ்திரேலியா கவுன்சல் ஜெனரல் சாரா கிர்லியூ.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களை முதலில் கவருவது நமது கலாச்சாரம்தான்.. நமது நாட்டில் உள்ளது போல, நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள், பண்பாடு, பாரம்பரியம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் பல நூறு சுவாரஸ்யங்கள் பொதிந்துள்ளன. இவற்றைப் பார்த்துப் பார்த்து வியக்காத வெளிநாட்டவரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
முன்பு எப்போதையும் விட இப்போதுதான் வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்து வருகிறது இந்தியா. இந்தியாவின் இந்த பன்முகத்தன்மையைப் பார்த்து வியப்பு வருவதில் ஆச்சரியம் இல்லைதான். இந்தியாவின் மிக முக்கியமான பாரம்பரியங்களில் ஒன்று உணவு. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊரிலும் ஒரு உணவுப் பாரம்பரியம் இருக்கும்.
குறிப்பாக தமிழ்நாடு.. தமிழ்நாட்டு சாப்பாட்டைச் சாப்பிட்டுப் பார்த்து விட்டால், பிறகு அவர்களுக்கு இந்த ஊரை விட்டுப் போகவே மனசு வராது.. அதிலும் தமிழ்நாட்டின் மல்லிப் பூ இட்லி, கெட்டி சட்னியை ஒரு முறை சாப்பிட்டு டேஸ்ட் பார்த்து விட்டால் அதன்பிறகு அதற்கு அவர்கள் அடிமையாகி விடுவார்கள்.. அப்படிப்பட்ட ஒரு இட்லி பிரியைதான் நம்ம சாரா கிர்லியூ. இவர் சென்னையில் உள்ள ஆஸ்திரேலியா கன்சுலேட்டில், கன்சுல் ஜெனரலாக இருக்கிறார். விரைவில் இந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஆஸ்திரேலியா திரும்பவுள்ளார்.
சாராவுக்கு நம்ம ஊர் இட்லி, தோசை, சட்னி, சாம்பார் என்றால் கொள்ளைப் பிரியம். அதை விரும்பி சாப்பிடும் அவர், தனது கையாலேயே இட்லி சுட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுள்ளார். கன்சுலேட்டில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்குப் போவதற்கு முன்பு ஒருமுறையாவது இட்லி சுட்டுப் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்ற அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் முன்வந்தது.
இதையடுத்து அடையார் ஆனந்தபவன் ஹோட்டலுக்குச் சென்ற அவருக்கு அங்கிருந்த சமையல் கலைஞர் எப்படி இட்லி சுட வேண்டும் என்று குட்டி டெமோ காட்டினார். இதையடுத்து கரண்டியில் மாவை எடுத்து இட்லி தட்டில் அழகாக ஊற்றினார் சாரா கிர்லியூ. ஒரு அடுக்கு முழுவதும் மாவை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்தார்.
இட்லி ரெடியாக எவ்வளவு நேரம் ஆகும் என்று அவர் கேட்க, அது கால் மணி நேரத்தில் வெந்து ரெடியாகி விடும் என்று சமையல் கலைஞர் கூற ஆச்சரியமாகி விட்டார் சாரா. அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் ஊற்றிய மாவு எப்படி இட்லியாக வெளியே வரப் போகிறது என்ற ஆச்சரியமும், படபடப்பும் அவருக்கு. அவரது முகத்திலேயே அது தெரிந்தது. சில நிமிடங்களில் இட்லி ரெடியாகவே, சமையல் கலைஞர் இட்லியை எடுத்து சாராவிடம் காட்டினார்.
தான் சுட்ட இட்லி சூப்பராக வந்திருப்பதைப் பார்த்து அப்படியே முகம் முழுக்க மகிழ்ச்சியாகி விட்டது சாராவுக்கு. வெந்திருந்த இட்லியைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார் சாரா. பிறகு சாப்பிடலாமா என்று அவர் கேட்க, அவரும், அவருக்கு இட்லி சுடச் சொல்லிக் கொடுத்த கலைஞரும் சாப்பிட அமர்ந்தனர். கெட்டி சட்னியும், சூடான சாம்பாரும் பின் தொடரவே, தான் சுட்ட இட்லியை சாப்பிட்டுப் பார்த்து செம ஹேப்பியாகி விட்டார்.
தானே இட்லி சுட்டு தானே சாப்பிட்டதை ஒரு பெரும் "வரலாற்று நிகழ்வாக" கருதும் சாரா அதை வீடியோ எடுத்து போட்டு மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்துள்ளார்.. சூப்பர் மேடம்!
Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 27, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!
கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?
திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்
Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!
Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!
Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்
{{comments.comment}}