இந்தியர்களின் இதயங்கள் நொறுங்கின.. உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

Nov 19, 2023,09:53 PM IST

அகமதாபாத்: 2023 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியா வென்றுள்ள இந்த கோப்பை.. கிரிக்கெட்டின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.


ஆரம்பத்திலிருந்து அற்புதமான விளையாட்டைக் கொடுத்து வந்த இந்தியா, இறுதிப் போட்டியில் தோல்வியுற்றதால், ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிப் போயுள்ளன. மொத்த தேசமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தார்.


ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனால் ரோஹித் மட்டுமே சிறப்பாக ஆடினார். சுப்மன் கில் தடுமாறி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றமளித்தார்.




விராட் கோலி அதிரடியாக செயல்பட்டு அரை சதம் போட்டார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சிகரமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இத்தோடு இந்தியாவின் அதிரடி பேட்டிங் முடிந்து போனது. கே. எல். ராகுல் மட்டுமே போராடி அரை சதம் தாண்டி ரன் எடுத்து  ஆட்டமிழந்தார்.


இறுதியில் 50 ஓவர்களில் இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா இன்று சிறப்பாக பேட் செய்தது. பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தியது. இதன் காரணமாகவே இந்தியா இன்று பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது. 


அதன் பிறகு தனது சேசிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்திலிருந்தே அதிரடியைக் காட்டியது. வார்னர், ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தாலும் கூட டிராவிஸ் நின்று நிலைத்து விட்டார். அவர் காட்டிய அற்புதமான விவேகமான ஆட்டம், அந்த அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்று விட்டது. 


ஆஸ்திரேலியா தனது 6வது உலகக் கோப்பையை இன்று வென்றுள்ளது. மொத்த ஆஸ்திரேலியாவுக்கும் இந்த வெற்றி உகந்ததுதான். அருமையான கிரிக்கெட்டை அவர்கள் கொடுத்துள்ளனர். அதேசமயம், மொத்த இந்தியர்களின் நெஞ்சங்களையும் இந்திய அணி வென்றுள்ளது. எப்போதும் ரசிகர்களின் இதயங்களில் இந்திய அணி நிறைந்திருக்கும்.. காரணம், இந்தத் தொடர் முழுவதும் அந்த அணி கொடுத்த அற்புதமான ஆட்டம்தான்.


பேட் கமின்ஸ் துல்லியம்




முன்னதாக இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  இதற்கு காரணம் நரேந்திர மோடி மைதானம் இரண்டாவது பேட் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும். இதுவரை இந்த மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவது பேட் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.


இதை கருத்தில் கொண்டே இந்த முறையும் உலக கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. கடைசியில் அவர் நினைத்தது போலவே நடந்து விட்டது. இதுவரை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியே அதிகபட்சமாக 6 முறை கோப்பை வென்றுள்ளது. இந்திய அணி இரண்டு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் இவற்றில் வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பை கிரிக்கெட் ஃபைனலில் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவும் மோதியுள்ளனர். அதற்குப் பிறகு தற்போது தான் இரண்டு அணிகள் மோதின. இந்தப் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்