அடிலெய்டில் மோசமான தோல்வியைச் சந்தித்த இந்தியா.. கை கொடுக்காத பவுலர்கள்.. ஆஸ்திரேலியா வெற்றி

Dec 08, 2024,11:12 AM IST

அடிலெய்ட்: பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாண்ட வெற்றியைப் பெற்று அசத்திய இந்தியா, அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில்  பரிதாபமான தோல்வியைத் தழுவியது.


இந்தியாவின் பேட்டிங் ஒரு பக்கம் கைவிட்ட நிலையில் பவுலர்களும் மோசமாக பந்து வீசி இந்தியாவுக்குப் பெரும் தோல்வியைப் பெற்றுக் கொடுத்து விட்டனர்.


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தற்போது ஆடி வருகிறது.  இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்தது. அதில் இந்தியா அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தியிருந்தது.




இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே அந்த போட்டியில் அபாரமாக இருந்தது. இந்த நிலையில் அடிலெய்ட் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் அப்படியே நிலைமை தலைகீழாக மாறியது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே இந்தியா பெரும் சொதப்பலை செய்து விட்டது. போட்டி முழுவதும் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கிக் காணப்பட்டது.


முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 180 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைக் குவித்தது. இந்திய பந்து வீச்சாளர்களை நையப்புடைத்து ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா. அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸை விட மோசமாக ஆடி 175 ரன்களில் சுருண்டு போனது. இதனால் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 3.2 ஓவர்களில் 19 ரன்களைக் குவித்து அபார வெற்றியைப் பெற்றது.  


10 விக்கெட் வித்தியாசத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரலியா, இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் அடைந்துள்ளது.


அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருப்பது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பவுலர்களின் செயல்பாடுகள் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்