சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு உருவானது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் 16, 17 ,18, ஆகிய மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது படிப்படியாக வலுவிழந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் மழை ஓய்ந்தபாடில்லை. பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழையாகவே பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக பெய்தால் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் பெய்த மழையால் தூத்துக்குடி முழுவதும் மழை நீர் ஆறு போல் ஓடுகிறது.
குற்றாலத்தில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சியில், மதுரை, ராமநாதபுரம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களாக வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன், மழையுடன் இதமான காற்று வீசி வருகிறது.
பல்வேறு பகுதிகளிலும் அதிகமான குளிர் வாட்டி எடுக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத் துறை முருகன் கோவில் மண்டபம் முழுவதும் நீரில் மூழ்கியது. தற்போது நெல்லை மாவட்ட அணிகளில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணியில் வெளியேற்றப்படுகிறது. அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை வந்துள்ளனர். அதில் 20 பேர் முக்கூடல் ஆற்றுக் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - 533 ஏரிகள் நிரம்பின
தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 533 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஏரிகள் நிரம்பி விட்டதால், மீண்டும் பெய்து வரும் மழையால் அதிகப்படியான உபரி நீர் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது மீண்டும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை அடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும் என்பதால் 17ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 16 17, 18, ஆகிய மூன்று நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}