ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லி முதல்வராகிறார் அதிஷி.. ஆட்சியமைக்க உரிமை கோரினார்

Sep 17, 2024,12:30 PM IST

டெல்லி:   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக கல்வி அமைச்சர் அதிஷி மார்லெனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்ஷேனாவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.


மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைக்கவில்லை. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  கடந்த 11ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.




திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை மக்கள் நேர்மையாளன் என சொல்லும் வரை பதவி வகிக்கப் போவதில்லை. 48 மணி நேரத்திற்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் அதிரடியாக அறிவித்திருந்தார்.  அவர் அளித்திருந்த 48 மணி நேரம் கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் முதல்வர் இல்லத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற  சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார் கெஜ்ரிவால்.


மேலும் புதிய முதல்வராக அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் மாலை 4:30 மணி அளவில் துணை கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்தார்.  அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து புதிய ஆட்சியமைக்க அதிஷி மார்லெனா உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்.  இதைத் தொடர்ந்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.


3வது பெண் முதல்வர்




அதிஷி மார்லெனா கல்வி அமைச்சராக தற்போது இருந்து வருகிறார். கெஜ்ரிவால் சிறைக்குச் சென்ற சமயத்தில் இவர்தான் பொறுப்பாக மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பது உள்ளிட்ட பணிகளைப் பார்த்துக் கொண்டார். மிகவும் தைரியமான பெண்மணி. இப்போது இவரைத் தேடி முதல்வர் பதவி வருகிறது.


டெல்லியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக 3 முறை பதவி வகித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல பாஜகவின் சுஷ்மா சுவராஜ், தேர்தலில் போட்டியிடாத நிலையில் 52 நாட்கள் முதல்வர் பொறுப்பை வகித்துள்ளார். தற்போது டெல்லியின் 3வது பெண் முதல்வராக அதிஷி பதவியேற்கவுள்ளார். மேலும் டெல்லியின் 8வது முதல்வராகவும் அதிஷி  உருவெடுத்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்