ஆசியக் கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் மோதல்

Aug 30, 2023,01:14 PM IST

இஸ்லாமாபாத் : ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.


ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தானில் இன்று துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 




இதில் ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. அதேபோல பி குரூப்பில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.


ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை குரூப் பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும். இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரானதாகும். கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது. 2வது போட்டி நேபாளத்துடன் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும்.


தொடக்கப் போட்டிகளைத் தொடர்ந்து சூப்பர் 4 ஸ்டேஜ் போட்டிகள் செப்டம்பர் 6ம் தேதி முதல்  16ம் தேதி வரை நடைபெறும்.  இறுதிப் போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும்.


இன்று துவங்கும் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. மாலை 3 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்