டிராகன் படத்தை தொடர்ந்து.. மீண்டும் இணையும்.. அஷ்வத்-பிரதீப் ரங்கநாதன் காம்போ.. !

Feb 21, 2025,04:33 PM IST

சென்னை: டிராகன் பட ரிலீஸை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து காம்போ மீண்டும் இணைய உள்ளதாகவும்,  அடுத்த மூன்று வருடத்திற்குள் இப்படம் உருவாக இருப்பதாகவும் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார் .


இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாகவும், அனுபமா பரமேஸ்வரன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மிஸ்கின், கௌதமேனன், காயாடு லோஹர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டிராகன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியது. இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 




இந்த நிலையில், இன்று வெளியான டிராகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான கதை நகர்வுகளுடன் உருவாகி இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை பெற்றுள்ளது. இதனால் வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், டிராகன் பட வெளியீட்டிற்கு பிறகு  நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளனர்.அப்போது டிராகன் படம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, எனக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்த அஷ்வதிற்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இந்த படம் முடித்த பிறகு தான் இவர் ஒரு எக்ஸ்ட்ரானடியான பிலிம் மேக்கர் என வியந்தேன். நல்ல கருத்துக்கள் சொல்கின்ற இது நல்ல படம். இந்தப் படத்தை கொடுத்த என்னுடைய பிரண்டுக்கு நன்றி எனக் கூறி, ஆரத் தழுவிக் கொண்டு முத்தங்களை இட்டார் பிரதீப் ரங்கராஜன்.பிறகு 

 ஏஜிஎஸ் அகோரம் நிறுவனத்திற்கு எனது நன்றி.அவர்கள் மிகவும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். நன்றி ஏ ஜி எஸ் நிறுவனம்.நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.


இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து பேசுகையில், 


இயக்குனர் அஸ்வத் திடீரென நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். அது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் எனது நண்பன் பிரதீப்பிற்குமே தெரியாது எனக் கூறினார். பிறகு ஏஜிஎஸ் புரடக்ஷனில் டைரக்டர் அஷ்வத் அண்ட் பிரதீப் காம்போ மீண்டும் வரும் என அறிவித்தார். இதற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். மேலும் எங்களுடைய அடுத்த படம் நண்பருக்காக இல்லை பிரதீப் என்ற அந்த ஸ்டாருக்காக. அடுத்த மூன்று வருடத்தில் மீண்டும் எங்களுடைய காம்போ வரும். என்னுடைய அடுத்த படம் ஏ ஜி எஸ் நிறுவனத்திலேயே தொடங்கும் என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்