Leo collection: 4 நாளில் ரூ. 400 கோடி வசூல்.. அதிர வைக்கும் "காம்ஸ்கோர்" ரிப்போர்ட்!

Oct 23, 2023,03:02 PM IST

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ள லியோ படம் நான்கு நாட்களில் ரூ. 400 கோடி வசூலை உலகம் முழுவதும் ஈட்டியுள்ளதாம்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் விஜய் நடித்துள்ள படம்தான் லியோ. படத்திற்கு எதிராக பலரும் விமர்சனங்கள் கொடுத்தாலும் கூட அதையும் தாண்டி ரசிகர்களைக் கவர்ந்து விட்டது லியோ. குறிப்பாக தெலுங்கில் இப்படத்தை விழுந்து விழுந்து மக்கள் ரசிக்கிறார்கள்.


விஜய்யின் நடிப்பை பலரும் பாராட்டுகிறார்கள். மேலும் விஜய்யை வித்தியாசமான முறையில் காட்டியுள்ளதாக லோகேஷுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. ஏற்கனவே வசூலில் ஆந்திரா, தெலங்கானா,  கேரளா, கர்நாடகாவில் சாதனை படைத்துள்ள லியோ, தமிழ்நாட்டிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.




இந்த நிலையில் லியோ படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ. 400 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் முதல் முறையாக காம்ஸ்கோர் தளத்திலும் லியோ படம் இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. காம்ஸ்கோர் பட்டியலில் 3வது இடத்தில் லியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


காம்ஸ்கோர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் உலகம் முழுவதும் மொத்தம் 48.5 மில்லியன் வசூலை செய்துள்ளது லியோ. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ. 400 கோடியாகும். காம்ஸ்கோரின் டாப் 10 படங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து லியோ மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்