சுப்ரீம் கோர்ட் கொடுத்த "லட்டு".. சாட்டையை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. அதிகாரி டிரான்ஸ்பர்!

May 12, 2023,09:21 AM IST
டெல்லி: டெல்லி அரசுக்கு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த சில மணி நேரத்திலேயே தனது அதிரடியைத் தொடங்கி விட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால்.

ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் துணை நிலை ஆளுநர் மூலம் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இதனால் நிம்மதியாக ஆட்சியை நடத்த முடியாமல்  போனது கெஜ்ரிவாலால். தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார்.



ஒரு பியூனைக் கூட நியமிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். அந்த அளவுக்கு மத்திய அரசு அத்தனை அதிகாரங்களையும் பறித்துக் கொண்டுள்ளது. அரசை அதிகாரிகள் மதிப்பதில்லை, நான் சொல்வதையோ, அமைச்சர்கள் சொல்வதையோ அவர்கள் கேட்பதே இல்லை. இதனால் அன்றாடப் பணிகளைக் கூட முறையாக செய்ய முடியவில்லை என்று குற்றம் சாட்டி வந்தார் கெஜ்ரிவால். 

டெல்லி துணை  ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்குத்  தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடித் தீர்ப்பை அளித்தது. காவல்துறை, பொது ஒழுங்கு, நிலம் ஆகியவை மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால்  அதிகாரிகள் தொடர்பான அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு கெஜ்ரிவால் அரசுக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது. இதுவரை இந்த அதிகாரத்தைத்தான் எதிர்பார்த்து கெஜ்ரிவால் அரசு காத்திருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த சூட்டோடு அதிரடியைத் தொடங்கி விட்டது கெஜ்ரிவால் அரசு. முதல் வேலையாக சேவைப் பிரிவு செயலாளார் ஆசிஷ் மோரேவை இடமாற்றம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தோடு நில்லாமல்,  டெல்லி அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் முதல்வர் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.  மக்கள் பணிகளுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.   மேலும் செய்தியாளர்களையும் சந்தித்தார் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறுகையில், மக்கள் பணிகள் தொய்வின்றி இனி நடைபெற வேண்டும். கண்காணிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்துள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள், முறையாக வேலை செய்யாத அதிகாரிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கெஜ்ரிவால்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை மூலமாக கெஜ்ரிவால் அரசுக்கு பாஜக தொடர்ந்து செக் வைத்து வந்தது. தற்போது அதற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காவல்துறை தொடர்ந்து உள்துறை அமைச்சகத்திடமே இருக்கும் என்பதால் காவல்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் அரசுக்குக் கட்டுப்பட வாய்ப்பில்லை.

சமீபத்திய செய்திகள்

news

LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்