என்னதான் படித்துள்ளார் பிரதமர் மோடி.. சந்தேகம் அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் மீண்டும் கேள்வி!

Apr 01, 2023,12:40 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு குறித்து குஜராத் ஹைகோர்ட் அளித்துள்ள உத்தரவு மேலும் பல சந்தேகங்களை அதிகரிக்கிறது. நாட்டின் பிரதமர் கல்வி அறிவு பெறாதவராக இருப்பது ஆபத்தானது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்து விபரம் தர தேவையில்லை என்று குஜராத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அது ரூ. 25,000 அபராதமும் விதித்துள்ளது.



இந்த நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் பிரதமரின் கல்வி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,குஜராத்  ஹைகோர்ட்டின் உத்தரவு பல கேள்விகளை எழுப்புகிறது. படிக்காத ஒருவர் அல்லது குறைந்த கல்வி அறிவு கொண்ட ஒருவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்தானது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாகவே பிரதமர் மோடியின் படிப்பு குறித்து விவாதங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வெளியிடுமாறு குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில்தான் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்