சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் கான்பரன்ஸ் கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி அனுமதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி பெரம்பூரில் பத்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் தொடர்பாக பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலையை நேரில் பார்த்த ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}