ஆம்ஸ்ட்ராங் கொலை.. தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு அஞ்சலை.. ஓட்டேரியில் கைது!

Jul 19, 2024,09:51 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  முன்னாள் துணைத் தலைவர் அஞ்சலையை போலீஸார் கைது செய்துள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸார் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர். சரமாரியாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு மேலும் 3 பேர் சிக்கினார்கள். இதற்கு இடையில் திருவேங்கடம் என்ற கைதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.




இந்தக் கொலை வழக்கில் மேலும் பல ரவுடிகள், அரசியல் கட்சிகளின் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. அவர்களில் முக்கியமாக புளியந்தோப்பு அஞ்சலை பெயர் அடிபட்டது. இவர் முன்னாள் ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலி ஆவார். சென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  முன்னாள் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவரது பெயர் கொலை வழக்கில் அடிபட்டதும் கட்சியை விட்டு இவர் நீக்கப்பட்டார். இதேபோல சம்போ செந்தில் எனப்படும் சம்பவம் செந்தில் என்பவர்  பெயரும் அடிபடுகிறது. இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். வக்கீலாக இருந்து ரவுடியாக மாறியவர் இவர். இவர்தான் இந்தக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக போலீஸ் தரப்பு நம்புகிறது.


இவர்கள் தவிர மேலும் பலரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் புளியந்தோப்பு அஞ்சலையை, ஓட்டேரியில் வைத்து தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அஞ்சலைக்கு கொலை வழக்கில் முக்கியப் பங்கு இருப்பதாக போலீஸ் தரப்பு நம்புகிறது. மேலும் இந்தக் கொலைக்காக தனது சார்பில் ரூ. 10 லட்சம் பணத்தை அஞ்சலை கொடுத்ததாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. அஞ்சலையை விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்