Chargesheet: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நாகேந்திரன் ஏ1, சம்பவம் செந்தில் ஏ2, அஸ்வத்தாமன் ஏ3!

Oct 03, 2024,06:10 PM IST

சென்னை:  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 5000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக  வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள்  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.




இதனைத் தொடர்ந்து  இந்த வழக்கை சம்பந்தப்பட்ட பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி என பலரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இடத்தில் என்கவுண்டரில்  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. 


இந்த வழக்கு தொடர்பாக, அடுத்தடுத்த விசாரணைகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கைதானார்கள். முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என இதுவரை  28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள  சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர காவல் துறை 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


அதில் முதல் குற்றவாளியாக நாகேந்திரனும், 2வது குற்றவாளியாக சம்பவம் செந்திலும், 3வது குற்றவாளியாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்கிராப் தொழிலைக் கைப்பற்றுவது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்