டெல்லி: தற்போதைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை மூன்றே நாட்களில் மூட்டை கட்டி விட முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா கூறியுள்ளார்.
சமிந்தா வாஸ், முத்தையா முரளீதரன் உள்ளிட்டோர் அடங்கிய எங்களது அணியுடன் இந்திய அணி மோதுவதாக இருந்திருந்தால் 3 நாட்களில் இந்தியாவை மூட்டை கட்டி இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கடந்த 12 வருடங்களாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் வெற்றியுடன் இருந்து வந்தது. இந்த வெற்றி பவனியை 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணி முடித்து வைத்தது. சமீப காலமாக இந்திய அணி தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் நடந்த மோதலில் 0-3 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 1-3 என்ற கணக்கிலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்த நிலையில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை நாங்கள் சந்திப்பதாக இருந்தால் மூன்று நாட்களில் மூட்டை கட்டி விடுவோம் என்று முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனரான துங்கா கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜூன ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது என்பது நினைவிருக்கலாம்.
ரனதுங்கா இது குறித்து டெலிகிராப் இதழுக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறும்போது சமிந்தா வாஸ், முத்தையா முரளி மற்றும் எனது அணியினர் இப்போது இந்திய அணியுடன் மோதுவதாக இருந்தால் மூன்று நாட்களுக்குள் இந்தியாவை நாங்கள் தோற்கடித்து விடுவோம். தற்போதைய இந்திய அணியால் வாஸ், முரளிதரன் பந்துவீச்சை சமாளிக்க முடியாது என்றும் அவர் கொக்கரித்துள்ளார்.
அர்ஜுன ரனதுங்காவின் இந்த பேட்டியால் இந்திய ரசிகர்கள் கோபமாகியுள்ளனர். ரனதுங்காவை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த அளவுக்கு கேலி செய்யும் அளவுக்கு இந்திய அணியும் உள்ளது என்பதுதான் சோகமானது.
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆனது முதலே இந்திய கிரிக்கெட் அணி தொடர் சரிவுகளையும் தோல்விகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் பல தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. இது கடும் விமர்சனங்கள் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பேட்டிங் ஆர்டரும் கூட மோசமாக உள்ளது.
குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் பார்ம் கேள்விக்குறியாகி உள்ளது. 2024 டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரின் சராசரி, வெறும் இருபதுக்குள் இருப்பது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
ரனதுங்கா தனது பேட்டியில் மேலும் கூறுகையில், தற்போதைய இலங்கையை அணி மிகச் சிறந்த அணியாக உள்ளது. இலங்கை அணியில் எந்த குறைபாடும் இல்லை. எந்த குறைவும் இல்லை. நிறைய திறமையாளர்கள் இங்கு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.. விராட் கோலியின் பார்ம் குறித்து அவர் கூறுகையில், விராட் கோலி உடனடியாக சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரு ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும். அது அவரது பேட்டிங் திறமையை மீண்டும் பெற உதவும். மூத்தவர்களின் அட்வைஸ் அவருக்கு நிறைய நல்லது செய்யும். கண்டிப்பாக அவர்கள் விராட் கோலிக்கு உதவுவார்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் அர்ஜுனா ரனதுங்கா.
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதுவதற்கு தயாராகி வருகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநங்கைகள் அணி, சிறார் அணி, இளம் பெண்கள் அணி.. 28 அணிகளை உருவாக்கியது தமிழக வெற்றிக் கழகம்!
மின் தேவையில் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.. மமதா பானர்ஜி அதிரடி அறிவிப்பு.. வடக்கில் சிதறுகிறதா இந்தியா கூட்டணி?
மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றத் தொடங்கி விட்டது ஏஐ.. பாரீஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Valentines week.. இமைகளின் பாஷைகளை.. இதழ் மணம் அறியும்.. கருங் கூந்தலின் சிரிப்பினை!
சேலத்தில்.. பஸ்ஸில் இடம் பிடிப்பது தொடர்பாக.. மாணவர்களிடையே மோதல்... ஒருவர் பலி
என்னாது.. பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா கெஜ்ரிவால்?.. பரபரக்கும் அரசியல் களம்!
திடீர் பயணமாக இன்று மாலை.. சென்னை வருகிறார்.. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்தப் படம் ஏன் கூடாது என்பதுதான்.. காதல் என்பது பொதுவுடமை எடுக்க முதல் காரணம்.. ரோகிணி பளிச்!
{{comments.comment}}