மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியிலிருந்து டங்ஸ்டன் ஆலைக்காக ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது சுரங்கங்கள் அமைச்சகம். இதன்மூலம் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிலிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளது ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம்.
தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு அடையாளங்கள், உயிர்ப்பன்மைய வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய இடம்தான் இந்த கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயிலாகவும் நேரில் சந்தித்தும் விளக்கிய பின்னரும் மத்திய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது.
தமிழ் மற்றும் தமிழர் உணர்வுகளையும் உரிமையும் துச்சமென மதிக்கும் பா.ஜ.க. அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும்.
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். பா.ஜ.க. அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது. அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிறந்தது டிசம்பர்.. குளிர் + சோகத்தின் அடையாளம்.. அமைதியாக முடியுமா.. நிம்மதியாக பிறக்குமா 2025?
IMD Forecast.. 3 மாவட்டங்கள், புதுவையில் இன்று மட்டும் அதி கன மழைக்கு வாய்ப்பு.. லேட்டஸ்ட் நிலவரம்
Test Audiences.. தமிழ் சினிமாவில் சாத்தியமா.. சரிப்பட்டு வருமா.. புதிய புரட்சி அரங்கேறுமா?
அக்டோபருக்குப் பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்தார்?.. சென்னை வந்ததும் அண்ணாமலை கேட்ட முதல் கேள்வி
அரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. சு. வெங்கடேசன் உறுதி
1 மணி வரை இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழை இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
ஃபெஞ்சல் புயல்.. முழுமையாக நிலப் பகுதிக்குள் சென்று விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்புப்பணிகளை விரைவுபடுத்துங்கள்.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
புதுச்சேரி அருகே நகராமல் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
{{comments.comment}}