மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டைத் தொடர்ந்து அதற்கு முக்கியக் காரணமாக அமைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்த போராட்ட குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை ஏற்று நாளை அரிட்டாபட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூர் அருகே உள்ள வள்ளாளபட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம், நாயக்கர் பட்டி, பெருமாள் மலை உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கிய 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இருப்பதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. மேலும் இந்த உரிமத்தை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் கடும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இருப்பினும் கூட மத்திய அரசு தொடர்ந்து அரிட்டாபட்டிக்கு அருகே உள்ள 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து மற்ற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தீர்மானித்தது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவில் மேலூர் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த ஏழாம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தினர். மதுரைக்கு பல ஆயிரக்கணக்கில் விவசாயிகளும், கிராம மக்களும் திரண்டு அமைதிப் பேரணியாக வந்தது நாடு முழுவதும் பேசு பொருளானது.
இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய உதவுவதாக கூறி விவசாயிகளுடன் கலந்து பேசினார். இது தொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் கனிமத்துறை மந்திரி கிஷன் ரெட்டியுடனும் போராட்டக் குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து திட்டம் கைவிடப்படும் என்ற நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படியே கடந்த 23ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மேலூர் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இனிப்பு வழங்கி உற்சாகமாக இதைக் கொண்டாடினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொடர் எதிர்ப்பு மற்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்தே டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்பட்டதால், முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்தனர். நாளையே இந்த பாராட்டு விழா நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ள வருமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வருமாறு போராட்ட குழுவினர் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக போராட்டக் குழுவினர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர் பி.மூர்த்தி அழைத்து வந்தார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கிராம மக்கள் அவருக்கு தங்களது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறும் அழைப்பு விடுத்தனர். அதை முதல்வரும் ஏற்றுக் கொண்டார். நாளை குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் பின்னர் அரிட்டாபட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
நாளை தான் அரிட்டாபட்டி செல்வது குறித்து எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார் முதல்வர். அதில், உங்கள் அன்பை ஏற்க நாளை நான் அரிட்டாபட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டங்ஸ்டன் போராட்டத்திற்குக் கிடைத்தது மாபெரும் வெற்றி.. அனைவருக்கும் நன்றி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என். ரவி. குடியரசு தின விருந்து.. அதிமுக, பாஜக பங்கேற்பு.. திமுக கூட்டணி புறக்கணிப்பு!
அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 11,608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்கு மொத்தமாக ரத்து!
ஜன நாயகன்.. காலையில் செல்பி புள்ளை.. மாலையில் நான் ஆணையிட்டால்.. அடுத்தடுத்து விருந்து வைத்த விஜய்
வேங்கைவயல் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. எஸ்ஐடி விசாரணை வேண்டும்.. விஜய்
பூஜை போட்டாச்சு.. மேலூர் அருகே பிரமாண்ட கட்டடத்திற்கு இடம் மாறுகிறது மதுரை மத்திய சிறை
பத்மபூஷண் விருது... குவியும் வாழ்த்துகள்.. ஆனால் அஜீத் குமார் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
Republic Day: தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.. டெல்லியில் கோலாகல விழா!
மெரீனாவில் கோலாகலம்.. தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா!
{{comments.comment}}