கவரைப்பேட்டை ரயில் விபத்து.. இதுதான் காரணமா.. தொடரும் விசாரணை.. பகீர் தகவல்கள்!

Oct 17, 2024,02:48 PM IST

சென்னை : கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.


திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த வாரம் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது  பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இது 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தால் ரயில் பாதை மோசமாக சேதமடைந்தது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் விபத்து குறித்து தீவிர விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் 15 ரயில்வே ஊழியர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.


இந்த விசாரணையில் வெளியான தகவல்களின் படி, தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 




விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.


திருட்டுக் கும்பல்தான் காரணமா?


இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  ரயில்வே ஊழியர்களை தொடர்ந்து இன்னும் சிலரிடமும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னீக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இரும்பு திருடும் கும்பல்களால் ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது பகீர் கிளப்பி உள்ளது.


பல பகுதிகளில் தண்டவாளங்களையே திருடிச் சென்று விடுவார்கள். ரயில்வே இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு அருகே தண்டவாளங்கள், தண்டவாளக் கட்டைகள் உள்ளிட்டவை அப்படி அப்படியே போடப்பட்டிருக்கும். இதைத் திருடும் கும்பல்களும் உள்ளன. அப்படி ஏதாவது ஒரு கும்பல் செய்த வேலையா இது என்றும் சந்தேகப்படுகிறதாம் காவல்துறை. முழு விசாரணைக்குப் பிறகே தெளிவு கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்