ஆர்ம்ஸ்டிராங் கொலையில் சரணடைந்த பூனை @ ஆற்காடு பாலு.. அண்ணன் கொலைக்காக நடந்த பழிவாங்கலா?

Jul 06, 2024,08:24 AM IST

சென்னை: சென்னை பெரம்பலூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்டிராங் படுகொலை தொடர்பாக ஆற்காடு பாலு உள்ளிட்ட 8 பேர் போலீஸில் சரணடைந்துள்ளனர். அவர்களைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது பழிக்குப் பழியாக நடந்த கொலைச் சம்பவமாக தற்போது பார்க்கப்படுகிறது. காரணம், இந்தக் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆற்காடு பாலுவின் சகோதரர், ஆற்காடு சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 9 பேர் கைதானார்கள். இந்தப் பின்னணியில் ஆர்ம்ஸ்டிராங் கொலை வழக்கில் பாலு சரணடைந்துள்ளதால், ஒருவேளை சுரேஷ் கொலைக்குப் பழிவாங்க ஆர்ம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.




ஆர்ம்ஸ்டிராங் கொலை வழக்கில் ஆற்காடு பாலு, ராமு, மணிவண்ணன், திருவேங்கடம், திருமலை, சந்தோஷ், அருள், செல்வராஜ் என 8 பேர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் இறுதியில்தான் உண்மையிலேயே என்ன காரணம், எதற்காக ஆர்ம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டார், இந்த கொலைக்குப் பின்னால் இருப்பது யார் என்பது உள்ளிட்ட முழுவிவரமும் தெரிய வரும். இப்போதைக்கு முன் விரோதம் காரணமாக நடந்த கொலையாக காவல்துறை தெரிவித்துள்ளது.


சங்கரராமன் கொலை வழக்கு


ஆற்காடு சுரேஷ் ஒரு ரவுடி.  சென்னையை மிரட்டி வந்த தாதா அப்புவின் சிஷ்யன். காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்புதான் முக்கியக் குற்றவாளி. அவன் போட்ட ஸ்கெட்ச்சில்தான் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். கோவிலுக்குள்ளேயே வைத்து அவரை கொடூரமாகக் கொன்றனர். இந்த வழக்கில்தான் பின்னர் ஜெயேந்திர சரஸ்வதி சாமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுரேஷ் பெயரும் அப்போது அடிபட்டது. சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கதிரவன் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சுரேஷ் பெயர் அடிபட்டது.  சுரேஷ் பல கொலைகளைச் செய்துள்ளார். அப்புவின் சிஷ்யரான சின்னா என்பவரையும் போட்டுத் தள்ளியுள்ளார் சுரேஷ். பூந்தமல்லி கோர்ட்டில் வைத்து இந்தக் கொலை நடந்தது.


சுரேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில்தான், அவரது  தம்பி பாலு தலையெடுக்க ஆரம்பித்தார். தனக்கென தனி கோஷ்டியைச் சேர்த்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.  சுரேஷின் தம்பி பாலு இந்தக் கொலை வழக்கில் சிக்கியிருப்பதால் இது பழிக்குப் பழிவாங்கும் கொலையா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்குப் பின்னர்தான் முழுவிவரம் தெரிய வரும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்